[X] Close
JUST IN
  • BREAKING-NEWS சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.85.63 காசுகளாகவும், டீசல் லிட்டருக்கு ரூ.79.82 காசுகளாகவும் விலை நிர்ணயம்
  • BREAKING-NEWS சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சீராய்வு மனு தாக்கல்
  • BREAKING-NEWS பிற கோயில்களை போல் அல்லாமல் எந்த நம்பிக்கை உள்ளவரும் வழிபடலாம் என்ற சிறப்புக்குரியது சபரிமலை - கேரள முதல்வர் பினராயி விஜயன் ட்வீட்
  • BREAKING-NEWS மேட்டுப்பாளையம்-உதகை ரயில் மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே நடுவழியில் நிறுத்தம்
  • BREAKING-NEWS கோவையில் இருந்து கேரளாவுக்கு செல்லும் அரசுப் பேருந்துகள் தமிழக எல்லையில் நிறுத்தம்
  • BREAKING-NEWS மேலடுக்கு சுழற்சி, வெப்பசலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் விட்டு விட்டு மழை பெய்யும் - வானிலை ஆய்வு மையம்

சிறுமி பாலியல் வன்கொடுமை : இளைஞர் கைது

child-sexual-harassment-police-is-arrested-the-person

15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கர்பமாக்கிய வாலிபர் மீது காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ். மங்களத்தை சேர்ந்த 23 வயது இளைஞர் கனி. தொழிலாளியாகப் பணி புரிந்து வருகிறார். ஆர்.எஸ். மங்களத்தை சேர்ந்த 15 வயது சிறுமியை ஆசை வார்த்தைகள் கூறி சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் கனி. 

இந்நிலையில் சில தினங்களாக சிறுமி சோர்வாக காணப்பட்டுள்ளார். இதனையடுத்து சந்தேகமடைந்த பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். பின்னர், சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கர்பமாக்கியது தெரியவந்தது.  அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் சிறுமியிடம் விசாரித்துள்ளனர். இளைஞர் கனி காதலிப்பதாக கூறி சிறுமியை இரு மாதங்களாக பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. சிறுமியை கர்பமாக்கியதுடன் திருமணம் செய்ய மறுத்து கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரில், சிறுமியை கர்பமாக்கிய ஆர்.எஸ். மங்களத்தை சேர்ந்த இளைஞர் கனி மீது திருவாடானை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ மற்றும் கொலை மிரட்டல் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close