[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாக உடைந்தது கொள்ளிடம் பாலம்
  • BREAKING-NEWS கேரள வெள்ளச்சேதத்தை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்- ராகுல்
  • BREAKING-NEWS 18-வது ஆசிய விளையாட்டு போட்டி இன்று தொடங்குகிறது
  • BREAKING-NEWS பாகிஸ்தான் பிரதமராக தெஹ்ரிக்-இ-இன்சாஃப் கட்சித் தலைவர் இம்ரான்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்
  • BREAKING-NEWS கேரளாவில் கனமழை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 324ஆக உயர்வு
  • BREAKING-NEWS டெல்லி ஸ்மிருதி ஸ்தலில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது
  • BREAKING-NEWS வெள்ளப் பெருக்கு பாதிப்பு: தமிழகத்தில் ஆங்காங்கே போக்குவரத்து துண்டிப்பு

ரோபோட் ஹோட்டலில் இளைஞர் குத்திக் கொலை: அலறியடித்து ஓடிய சென்னை வாடிக்கையாளர்கள்..!

murder-in-chennai-robot-hotel

சென்னை செம்மஞ்சேரியில் உள்ள ரோபோட் ஹோட்டலில் சர்வீஸ் செய்வதில் பணியாளர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் டார்ஜிலிங்கை சேர்ந்த ஒருவர் கத்தியால் குத்திப் படுகொலை செய்யப்பட்டார்.

சென்னை சோழிங்கநல்லூர் அடுத்த செம்மஞ்சேரியில் இயங்கி வரும் ரோபோட் உணவகத்தில் பணி செய்து வருபவர்கள் டார்ஜிலிங்யை சேர்ந்த அணில் குரு(29), யுனஸ்(26). இருவருக்கும் சர்வீஸ் செய்வதில் நேற்றிரவு தகராறு ஏற்பட்டது. தகராறில் ஆத்திரமடைந்த அணில்குரு அருகில் இருந்த உணவகத்தில் பயன்படுத்தக்கூடிய சிறிய கத்தியை எடுத்து சரமாரியாக யுனஸ்ஸை குத்திப் படுகொலை செய்தார். கத்திக் குத்துப்பட்ட யுனஸ் சம்பவ இடத்திலேய பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவத்தை அறிந்த வாடிக்கையாளர்கள் அலறி அடித்துக்கொண்டு உணவகத்தில் இருந்து ஓடினர்.

இதனையடுத்து சம்பவம் குறித்து அருகில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து யுனஸ் உடலைக் கைபற்றி உடற்கூறு ஆய்வுக்காக சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் உணவகத்தில் பணிபுரியும் ஊழியர்களிடமும், நிர்வாகிகளிடமும் விசாரணை மேற்கொண்டனர். உணவகத்தில் பாதுகாப்பிற்காக பொறுத்தி வைக்கப்பட்ட சிசிடிவி கேமராவில் கொலையான காட்சி பதிவாகியுள்ளதாக என சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இதனையடுத்து கைது செய்யப்பட்ட அணில்குருவை செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தகவல்கள்: சாந்தகுமார், செய்தியாளர்.

வீடியோ

Advertisement:
Related Tags : Robot Hotel
Advertisement:
Advertisement:
[X] Close