[X] Close
JUST IN
  • BREAKING-NEWS நீட் தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க வீரரை இடித்த விவகாரத்தில் விராட் கோலிக்கு ஐசிசி கண்டனம்
  • BREAKING-NEWS சென்னையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 6 வயது சிறுமி உயிரிழப்பு
  • BREAKING-NEWS கோரிக்கைகளை பரிசீலிப்பதாக நிதித்துறை செயலாளர் கூறியதால் வங்கி அதிகாரிகள் வேலை நிறுத்தம் ஒத்திவைப்பு

காதல் திருமணம் செய்த பெண்ணை கொலை செய்த குடும்பம்

madhya-pradesh-murder-a-family-killed-women

மத்திய பிரதேசத்தில் வேறு சமுதாயத்தை சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்ட பெண்ணை அவரது குடும்பத்தினரே படுகொலை செய்துள்ளனர்.

மத்திய பிரதேசத்தை சேர்ந்த சர்ளா மாலி (வயது 24) என்ற பெண் தனது குடும்பத்தை எதிர்த்து பங்கஜ் மாலி என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இவர்களின் திருமணத்தால் சர்ளா மாலி குடும்பத்தினர் ஆத்திரத்தில் இருந்ததாக தெரிகிறது. திருமணத்திற்கு பிறகு சர்ளா மாலி தனது கணவருடன் பக்கத்து கிராமத்தில் வசிந்து வந்துள்ளார். இந்நிலையில் சர்ளாவின் வீட்டுக்கு வந்த அவரது சகோதரர் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை வந்து பார்த்துவிட்டு போ என கூறியுள்ளார். சகோதரனின் பேச்சை நம்பிய சர்ளா அவரது கிராமத்திற்கு உடல்நிலை சரியில்லாத தனது தாயைக் காண செய்துள்ளார். ஆனால் வந்தபிறகுதான் தனது சகோதரன் கூறியது உண்மை இல்லை என்பது அந்தப்பெண்ணுக்கு தெரியவந்தது. அங்கு என்ன நடக்கிறது என்பதை அந்தப்பெண் புரிந்துகொள்வதற்குள் அவரது குடும்பத்தினர் கரும்பு வெட்ட பயன்படுத்தும் கத்தியைக் கொண்டு அவரை படுகொலை செய்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 
 

போட்டோ கேலரி

0 of 1

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close