[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இந்திய அணி
  • BREAKING-NEWS வரும் 17-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம் 25-ஆம் தேதி வெளியீடு: நவம்பர் 18-ஆம் தேதி வரை திருத்தங்கள் செய்யலாம்
  • BREAKING-NEWS ஈரோடு மாவட்டம் கோபி செட்டிப்பாளையத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு

TVS XL வாகனத்தை மட்டுமே திருடும் பலே திருடன்

man-stealing-only-gear-less-vehicle

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் போலீசார் வழக்கம் போல அன்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காவல் ஆய்வாளர் அழகேசன் தலைமையில் சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை நிறுத்தினர். வாகனத்தின் ஆவணங்களை கேட்டு சோதனை செய்தபோது, அந்த நபர் எந்த பதிலும் சொல்லாமலும், ஆவணங்கள் தராமலும் இருந்தார்.

அவரது நடவடிக்கையில் சந்தேகமடைந்த காவல்துறையினர் காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அந்த நபர் மன்னார்குடியை சேர்ந்த செல்வம் என்பதும், அவர்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிய வந்தது. தொடர்ந்து விசாரணை நடத்திய போலீசார் செல்வத்தை அழைத்துக் கொண்டு ,சில இருசக்கர வாகனங்கள் இருந்த இடத்துக்கு சென்றபோது அதிர்ந்து போயினர்

மொத்தம் 22 இருசக்கர வாகங்கள் , அதுவும் TVS XL வகையிலான வாகனங்கள் மட்டுமே இருந்தது. போலீசாரின் கேள்விகளுக்கு பதிலளித்த செல்வம் “ தனக்கு கியர் வண்டிகள் ஓட்டத்தெரியாது என்பதால், கியல் இல்லாத TVS XL வாகனங்களை திருடுவதாக தெரிவித்தார். மேலும், கியர் வாகனங்களை திருடுவது குறித்து தெரியும் என்றாலும் , வண்டியை ஓட்ட இன்னொருவரை அழைத்துச் செல்லம் வேண்டும், அவருக்கும் பங்கு தர வேண்டும் என்பதால் அதனை தவிர்த்து வந்ததாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து செல்வத்தின் மீது வழக்குப்பதிவு செய்து , போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கியர் வண்டி ஓட்டத்தெரியாது என்பதால் மயிலாடுதுறை பகுதியில் பலரின் கியர் வாகனங்கள் தப்பியது.

Advertisement:
Related Tags : BikeThiefMannargudiMayiladuthuraiTVS bikeArrestPolice
Advertisement:
Advertisement:
[X] Close