[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழகத்தில் இன்றும் கனமழைக்கு வாய்ப்பு
  • BREAKING-NEWS நள்ளிரவில் அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்பட்டது அத்திவரதர் சிலை..!
  • BREAKING-NEWS சந்திரயான்-2 விண்கலம் செப்.7 ஆம் தேதி நிலவில் தரையிறங்குகிறது - இஸ்ரோ
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் உபரிநீர் திறப்பு வினாடிக்கு 34,000 கன அடியாக அதிகரிப்பு
  • BREAKING-NEWS தமிழகத்தில் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.6 உயர்வு - தமிழக அரசு

டாம் குரூஸ் படத்துக்காக ஹாலிவுட் செல்லும் மலையாள நடிகர்

sasi-kalinga-in-hollywood-movie

மலையாளத்தில் சின்னசின்ன ரோல்களில் நடித்துவந்த காமெடி நடிகரான சசி கலிங்கா ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிக்கும் ஹாலிவுட் படமொன்றில் டாம் குரூஸ் உடன் நடிக்க இருக்கிறார். ஒரு ஹாலிவுட் படத்தில் சசி லிங்கா நடித்து வருகிறார் என ஏற்கனவே தகவல்கள் வெளிவந்தன. தற்போது அந்த படம் குறித்த சில விவரங்களை மலையாள காமெடி நடிகர் அஜு வர்கீஸ், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

உலக புகழ்பெற்ற ஆஸ்கார் விருது இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிக்கும் இப்படத்தில் ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் டாம் குரூஸ் உடன் சசி கலிங்கா நடிக்க இருக்கிறார். ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் தயாரிப்பில் மலையாள நடிகர் ஒருவர் நடிப்பது நாம் ஒவ்வொருவரும் பெருமைப்பட கூடிய விஷயம் எனவும் அஜு வர்கீஸ் தெரிவித்துள்ளார். சசி கலிங்கா அந்த படத்தில் யூதாஸ் பாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் அத்தகைய வேடத்தில் நடிக்க அவர் 15 கோடி ரூபாய் சம்பளம் கேட்டதாக கூறப்படுகிறது இது உண்மை எனில் மலையாள திரையுலகில் அதிகம் சம்பளம் பெற்றிருப்பவர் இவராகவே இருக்க முடியும் என தெரிகிறது.

இரண்டு வருடங்களுக்கு முன் இயக்குனர் கமல் டைரக்சனில் ‘கடம்மா’ என்கிற படத்தில் நடிப்பதற்காக துபாய் சென்றிருந்தபோது ஏதேச்சையாக அங்குள்ள ரெஸ்டாரன்ட்டில் இவரை ஒரு நபர் சந்தித்து பேசினாராம்.. அப்போது யாரோ ஒரு வெளிநாட்டுக்காரர் என்கிற அளவில் அவருடன் பேசிவிட்டு வந்த சசி கலிங்கா, பின்னாளில் அவரால் தான் இந்த ஹாலிவுட் பட வாய்ப்பே கிடைக்கப்போகிறது என கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லையாம்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close