நடிகர் அதர்வா ரூ. 6 கோடி மோசடி செய்ததாக கூறி திரைப்பட விநியோகஸ்தர் சென்னை காவல் ஆணையரிடம் புகார் கொடுத்துள்ளார்.
தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளரும், விநியோகஸ்தரருமான மதியழகன் என்பவர் இன்று சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் மதியழகன் பேசினார். அப்போது அவர், “மறைந்த நடிகர் முரளியின் மகன் அதர்வாவின் ‘செம போத ஆகாதே’ என்கிற திரைப்படம் சொந்த தயாரிப்பில் கடந்த வருடம் வெளியாகியது. இந்தப் படத்தின் விநியோக உரிமையை ரூ. 5.5 கோடிக்கு அதர்வாவிடம் பெற்றேன்.
இந்நிலையில் படம் வெளியாக தாமதம் ஆனதால் ரூ. 5.5 கோடி நஷ்டம் ஏற்பட்டது. இதற்கு காரணம் அதர்வாதான். மேலும் இந்தப் படத்தில் ஏற்பட்ட நஷ்டம் தொடர்பாக அதார்வாவிடம் கேட்ட போது முறையான பதில் அளிக்கவில்லை.
தயாரிப்பாளர் சங்கத்தில் சென்று முறையிட்டேன். இதனைத் தொடர்ந்து அதர்வாவை வரவழைத்து சங்கம் பேச்சுவார்த்தை நடத்தியது. நஷ்டத்திற்கு ஈடாக பணம் இல்லாமல் படம் நடித்து தருவதாக கூறி அதர்வா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். பின்னர் "மின்னல் வீரன்" என்ற படத்தை அதர்வா வைத்து பூஜை போட்டோம். அதற்காக ரூ. 50லட்சம் வரை செலவு செய்தோம்.
ஆனால், இந்தப் படத்தையும் அதர்வா முடித்து தராமல் ஏமாற்றி விட்டார். இதனால் ரூ. 6 கோடி வரை அதர்வா நம்பிக்கை மோசடி செய்துள்ளார். இது தொடர்பாக நஷ்ட தொகையை கேட்டப்போது 3 மாதத்தில் அவர் தருவதாக கூறினார். ஆனால் 1 வருடம் ஆகியும் பணம் தராமல் ஏமாற்றி விட்டார். இதனால்தான் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்து உள்ளேன். மேலும் பணத்தை ஏமாற்றிய அதர்வா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறினார்.
உன்னாவ் வன்கொடுமை: அமைச்சர்களை தடுத்து நிறுத்திய கிராம மக்கள்... விரட்டியடித்த போலீஸ்..!
ரஜினியின் வேண்டுகோள் முதல் தமிழக வீராங்கனைக்கு கிடைத்த தங்கம் வரை...! #TopNews
நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கை வீண்போகாது - தர்பார் இசை வெளியீட்டில் பேசிய ரஜினிகாந்த்!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை மீண்டும் நாட முடிவு - மு.க.ஸ்டாலின்
"என் மன உறுதியைக் குலைக்கவே சிறையில் அடைத்தனர்" ப.சிதம்பரம் சாடல்