[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஜிஎஸ்டியின் அடிப்படை வரி விகிதங்களை உயர்த்த மத்திய அரசு திட்டம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்‌பான அறிவிப்பாணையை ரத்து செய்தது மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS 200 ரூபாயை தாண்டியது ஒரு கிலோ வெங்காயத்தின் விலை

பினராயி விஜயனாக நடிக்கும் மம்முட்டி - ‘ஒன்’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்.

one-movie-first-look-mammootty-pinarayi-vijayan

மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் மம்முட்டி நடிக்கும் ‘ஒன்’ திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்ட்டர் நேற்று வெளியானது. தற்போது மலையாள சினிமா ரசிகர்களால் பெரிதும் எதிர் பார்க்கப்படும் திரைப்படம் இது. காரணம் இப்படத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் மெகா ஸ்டார் மம்முட்டி.

பினராயி விஜயனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி உருவாகும் இத்திரைப்படத்தை., ‘சிறகொடிந்த கனவுகள்’ படத்தை இயக்கிய சந்தோஷ் விஷ்வநாத் இயக்குகிறார். பினராயி விஜயனின் வாழ்வைப் பேசும் இப்படத்தில் ஸ்ரீனிவாசன், ஜோஜூ ஜார்ஜ், உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ICHAIS productions நிறுவனம் சார்பில் ஸ்ரீலக்ஷ்மி தயாரித்து பாபி மற்றும் சஞ்சய் திரைக்கதை எழுதியிருக்கும் இப்படம் 50 கோடி ரூபாய் பொருட் செலவில் உருவாக உள்ளது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close