[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இரண்டாவது டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி பெற்றது
  • BREAKING-NEWS தமிழகத்தில் வெங்காய விளைச்சல் நன்றாக உள்ளதால் 20 நாட்களில் விலை குறையும் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக நீதிமன்றத்தை நாட திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானம்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவில்லை - கமல்ஹாசன்
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் 4 மருத்துவக் கல்லூரிகள் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசுக்கு தமிழக அரசு கடிதம் - அமைச்சர் விஜயபாஸ்கர்
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலில் யாருக்கும் ரஜினி ஆதரவில்லை- ரஜினி மக்கள் மன்றம் அறிக்கை
  • BREAKING-NEWS கடலோர மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

விஜய் சேதுபதியின் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' பட போஸ்டர் வெளியீடு! 

vijaysethupathi-s-33-movie-name-has-been-released

விஜய் சேதுபதி நடிக்கவுள்ள 33-வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்துக்கு யாதும் ஊரே யாவரும் கேளிர்  என பெயரிடப்பட்டுள்ளது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய் சேதுபதி அடுத்தடுத்து படங்களை கொடுத்து வருகிறார். தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்துள்ளார். கதாநாயகன் என்று மட்டுமல்லாமல் வில்லன் கதாபாத்திரங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

'விக்ரம் வேதா', 'பேட்ட' போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான தெலுங்கு திரைப்படமான 'சைரா நரசிம்மா ரெட்டி‘ படத்திலும் நடித்தார். தற்போது விஜய் 64 படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் விஜயுடன் விஜய் சேதுபதி இணைந்துள்ளதால் பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ள 33-வது திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்துக்கு‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’  என பெயரிடப்பட்டுள்ளது. இந்தப்படத்தை வெங்கட கிருஷ்ணா ரோகந்த் இயக்குகிறார். இந்தப்படத்தில் இயக்குநர் மகிழ் திருமேனி வில்லனாக நடிக்கிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி இசைக்கலைஞராக நடிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close