தன் கணவருடன் ‘தலை’ தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை இன்ஸ்டாவில் நடிகை பிரியங்கா சோப்ரா பகிர்ந்து கொண்டுள்ளார்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கும் நிக் ஜோன்ஸுக்கும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திருமணம் நடைபெற்றது. ஜிக் ஒரு வெளிநாட்டுக்காரர். பிரியங்காவைவிட வயதில் குறைவான நிக்கை இவர் மணம் புரிந்ததால் பாலிவுட் உலகில் இந்தத் திருமணம் பேசு பொருளாக மாறியது.
இந்நிலையில் இந்த இளம் ஜோடி தீபாவளி பண்டிகையை மிக உற்சாகமாக மெக்சிகோவில் கொண்டாடி வருகிறது. இது இவர்களது திருமணத்திற்குப் பிறகு வரும் முதல் தீபாவளி. ஆக, இந்திய வழக்கபடி படி இது இவர்களுக்கு தலை தீபாவளி. தங்களது தீபாவளி கொண்டாட்டம் சம்பந்தமான புகைப்படங்களை பிரியங்கா, தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அதில், “எல்லோருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள். நாங்கள் ‘காபோ’வில் தீபாவளி கொண்டாடுகிறோம். அமைதியும் செழிப்பும் பெருகட்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார். ‘காபோ சான் லுகாஸ்’ என்பது ஒரு ரெசார்ட். இது மெக்சிகோவில் உள்ளது. அங்குதான் இந்த ஜோடி தற்போது உள்ளனர்.
இந்தப் படத்தில் பிரியங்கா தங்க நிறத்திலான சேலையை அணிந்துள்ளார். ஆனால் வெள்ளை சட்டையில் மிக சாதாரணமாக நிக் உள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன் வடமாநிலங்களில் மணமான புது தம்பதிகள் மிக விமரிசையாக கொண்டாடப்படும் ‘கர்வா செளத்’ பண்டிகையை இந்த ஜோடி கொண்டாடியது. அப்போது நிக் தன் இன்ஸ்டாவில் ஒரு பதிவை இட்டிருந்தார். அதில், “என் மனைவி ஒரு இந்தியன். அவர் ஒரு ஹிந்து. அவர் எனக்கு ஹிந்து கலாசாரத்தையும் மதத்தையும் கற்று தந்தார். நான் அவரை நேசிக்கிறேன். மதிக்கிறேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.
திருமணமாகாத ஆணும் பெண்ணும் ஹோட்டலில் ஒரே அறையில் தங்குவதில் என்ன தவறு..?:சென்னை உயர்நீதிமன்றம்
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
உன்னாவ் கொடூரம்... சிகிச்சைப் பலனின்றி பெண் உயிரிழப்பு...
ஜார்க்கண்ட் மாநில தேர்தல் : இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம்!
சலூனுக்குள் ஒரு நூலகம்: வாசித்தால் கட்டண சலுகை... பொன் மாரியப்பனின் புதிய முயற்சி..!
“பாத்திரம், மூங்கில் குச்சி, ஹெட்ஃபோன், இரும்பு ஸ்க்ரூ”: பள்ளிக்கு அலாரம் தயாரித்து அசத்திய மாணவர்
“தோனி..தோனி என ரசிகர்கள் கத்தட்டுமே.. பழகிக் கொள்ளுங்கள் ரிஷப்” - கங்குலி அட்வைஸ்
‘இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு’- திரைப் பார்வை