[X] Close
JUST IN
  • BREAKING-NEWS இந்த ஆண்டு ரூ.600 கோடி செலவில் 2 ஆயிரம் புதிய பேருந்துகள் வாங்கப்படும் - முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மிதமான மழைபெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS ஹைட்ரோ கார்பன், நியூட்ரினோ போன்ற அனைத்து திட்டங்களுமே வளர்ச்சிக்கான திட்டம் - தமிழிசை சவுந்தரராஜன்
  • BREAKING-NEWS அண்ணா பல்கலைக்கழக கல்விக் கட்டணம் உயர்வு : அட்டவணை வெளியீடு
  • BREAKING-NEWS ”உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு அக்டோபரில் வெளியாகும்” - மாநில தேர்தல் ஆணையம்
  • BREAKING-NEWS கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு காவிரி நீர் திறப்பு

இசை அமைப்பாளர் ஆகிறார் ’தள்ளிப் போகாதே’ சித் ஸ்ரீராம்!

sid-sriram-to-make-his-debut-as-a-composer

பாடகர் சித் ஸ்ரீராம், மணிரத்னம் தயாரிக்கும் படம் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமாகிறார்.

தமிழில், தள்ளிப்போகாதே.., மறுவார்த்தை பேச, குரும்பா, என்னடி மாயாவி நீ, கண்ணான கண்ணே... உட்பட ஏராளமான ஹிட் பாடல்களை பாடியிருப்பவர் சித் ஸ்ரீராம். பாடகராக பிசியாக இருக்கும் இவர், இப்போது இசை அமைப்பாளராக அறிமுக மாகிறார். 

மணிரத்னம் கதை, திரைக்கதையில் அவர் உதவியாளர் தனசேகரன் இயக்கும் படம், 'வானம் கொட்டட்டும்’. விக்ரம் பிரபு, மடோனா நடிக்கும் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், சரத்குமார், ராதிகா உள்பட பலர் நடிக்கின்றனர். இதற்கு ’96’ படத்துக்கு இசை அமைத்த கோவிந்த் வசந்தா இசையமைப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில்  பாடகர் சித் ஸ்ரீராம் இசை அமைப் பாளராக ஒப்பந்தமாகி இருக்கிறார்.

இதுபற்றி படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் சிவ ஆனந்த் கூறும்போது, ‘’முதலில் இந்தப் படத்துக்கு கோவிந்த்-திடம் பேசியி ருந்தோம். படத்தின் ஷூட்டிங்கை உடனடியாக தொடங்க வேண்டியிருந்தால், கால்ஷீட் பிரச்னை ஏற்பட்டது. அதனால், இளம் பாடகர் சித் ஸ்ரீராமிடம் கேட்டோம். அவர் சம்மதம் தெரிவித்தார்’’ என்றார்.

சித் ஸ்ரீராம் கூறும்போது, ’’இந்தப் படத்துக்கு முற்றிலும் புதிய சவுண்ட்டை கொடுக்க இருக்கிறோம். என்ன மாதிரியான சத்தம் என்பதை இப்போது சொல்ல இயலாது. ஆரம்ப கட்டத்தில் இருக்கிறோம். இது தொடர்பாக இயக்குனர் தனசேகரனிடம் பேசி வருகிறேன். இயக்குனர் மணி ரத்னத்தையும் சந்தித்து பேசினேன். அவருடன் பேசியது ஊக்கமளிப்பதாக இருந்தது’’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close