[X] Close
JUST IN
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.
  • BREAKING-NEWS தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட்டில் ரோகித் சர்மா அசத்தல் சதம். போதிய வெளிச்சமின்மை காரணமாக முன்கூட்டியே முடிவுக்கு வந்தது முதல்நாள் ஆட்டம்
  • BREAKING-NEWS இடைத்தேர்தல் நடைபெறும் மூன்று தொகுதிகளிலும் பரப்புரை ஓய்ந்தது. வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் தீவிரம்
  • BREAKING-NEWS தமிழகம், புதுச்சேரியில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம்

‘தர்பார்’ ரஜினியுடன் படப்பிடிப்பில் இணைந்தார் நடிகர் யோகிபாபு

yogi-babu-joins-the-sets-of-darbar

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘தர்பார்’ படப்பிடிப்பில் காமெடி நடிகர் யோகி பாபு இணைந்துள்ளர்.

‘சர்கார்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் முருகதாஸ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் திரைப்படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் படப்பிடிப்பு மும்பையில் நடைபெற்று வருகிறது. ஆகவே படக்குழுவினருடன் ரஜினிகாந்த் கலந்து கொண்டு அவருக்கான காட்சிகளை முடித்து கொடுத்து வருகிறார். இவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க இருக்கிறார். இதற்காக அவர் தனக்கான படப்பிடிப்பு காட்சிகளில் விரைவில் பங்கேற்க உள்ளார்.  இப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. இந்தப் படம் ரஜினியின் அரசியல் வாழ்க்கைக்கு ஒரு முன்னோட்டமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. 

இந்நிலையில் தமிழ் சினிமாவின் பிசி நடிகரான யோகி பாபு, ‘தர்பார்’ படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்தது. ரஜினியுடன் இவர் முதன்முறையாக நடிக்க இருக்கிறார். இவருக்கான காட்சிகள் பிரம்மாண்டமாக போட்டப்பட்ட செட்டில் எடுக்கப்பட்டு வருகின்றன. அதற்கான சில வீடியோ காட்சி வெளியாகி உள்ளது. ரஜினியுடன் நிவேதா தாமஸ், யோகி பாபு இணைந்த காட்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. 

யோகி பாபு, தற்போது விஜயின் ‘தளபதி63’ படத்தில் நடித்து வருகிறார். ஒரே நேரத்தில் இரண்டு பெரும் நடிகர்களுடன் இவர் இணைந்திருப்பதால் இவரது மார்க்கெட் அளவு கூடியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close