[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அடுத்த 5 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னையில் சாலைகளில் தேங்கியுள்ள மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி
  • BREAKING-NEWS சென்னையில் பள்ளிகள் வழக்கம்போல இயங்கும் : மாவட்ட ஆட்சியர்

வைரலாகும் அஜித்தின் கிளீன் ஷேவ் போட்டோ

ajith-s-photo-from-nerkonda-paarvai-shoot-goes-viral

‘நேர்கொண்ட பார்வை’படப்பிடிப்பு தளத்தில் கிளீன் ஷேவ் செய்த தோற்றத்தில் வெளியாகியுள்ள நடிகர் அஜித் குமாரின் படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் அமிதாப் பச்சன் நடித்த பாலிவுட் திரைப்படம் ‘பிங்க்’, தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. நடிகர் அஜித் குமார் தமிழில் நடிக்கும் இந்தப் படத்தை, ‘சதுரங்கவேட்டை’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’ ஆகிய படங்களை இயக்கிய வினோத் இயக்குகிறார். படத்தை நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இந்தப் படம் போனி கபூரின் தயாரிப்பு நிறுவனத்திற்கு தமிழின் முதல் படமாகும். 

இந்தப் படத்தின் ஃபர்ஸ் லுக் போஸ்டர் முன்னதாக வெளியிடப்பட்டது. அதில் அஜித் நரைத்த முடி, தாடியுடன், அமிதாப் பச்சன் ‘பிங்க்’ படத்திலிருந்த கெட்-அப்பில் காட்சியளித்தார். இதனால் அஜித் படம் முழுக்க சற்று வயதான தோற்றத்தில் இருப்பரோ என்ற கருத்து உருவாகியது. இந்நிலையில் கிளின் ஷேவ் செய்தவாறு நடிகர் அஜித் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. ஏற்கனவே படக்குழு தெரிவித்திருந்த தகவலின்படி, ஏப்ரல் 20 வரை ஐதராபாத்தில் தொடர்ந்து படப்பிடிப்பு இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததால், இந்தப் படம் அங்கு தான் எடுக்கப்பட்டுள்ளது.  

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close