[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அத்திவரதரை தரிசிப்பதற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்களில் 3 பேர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழப்பு
  • BREAKING-NEWS தேசத் துரோக வழக்கில் வைகோவுக்கு விதிக்கப்பட்ட ஓராண்டு சிறை தண்டனை நிறுத்திவைப்பு
  • BREAKING-NEWS வேலூர் மக்களவை தேர்தலில் மக்கள்நீதிமய்யம் போட்டியிடவில்லை - பொதுச்செயலாளர் அருணாச்சலம்
  • BREAKING-NEWS வேலூரில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு ஜூலை 24ஆம் தேதி விடுமுறை; வேலூர் மக்களவை தேர்தலில் பணியாற்றவுள்ள ஆசிரியர்களுக்கு 2ஆம் கட்ட பயிற்சி நடைபெறுகிறது; விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் வரும் 20ஆம் தேதி பள்ளிகள் இயங்கும் - மாவட்ட ஆட்சியர்
  • BREAKING-NEWS 7 பேர் விடுதலை விவகாரம்: நளினி தொடர்ந்த வழக்கு தள்ளுபடி
  • BREAKING-NEWS சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

2.0 நாளை வெளியீடு : படம் பார்க்க லீவு விட்ட அலுவலகம்

a-office-announced-holiday-tomorrow-for-2-0-movie-in-covai

கோயம்பத்தூரில் 2.0 திரைப்படத்தை கண்டுகளித்து கொண்டாடும் விதமாக, தனியார் அலுவலகம் விடுமுறை அறிவித்துள்ளது.

கோயம்பத்தூர் மாவட்டம் சித்தாப்புதூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் ஒன்று நாளை விடுமுறை அறிவித்துள்ளது. 
ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் நாளை வெளியாகவுள்ள 2.0 படத்தை பார்த்து கொண்டாடும் வகையில் இந்த விடுப்பு வழங்கப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்தின் கடின உழைப்பு, நேர்மை மற்றும் தொழில் அர்ப்பணிப்பு பலவற்றை கற்றுக்கொடுப்பதாக அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அத்துடன் படம் உலக சாதனைகள் அனைத்தையும் முறியடித்து வெற்றி பெறவேண்டும் எனவும், ரஜினிகாந்த், ஷங்கர், அக்‌ஷய் குமார் மற்றும் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஆகியோருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. படத்தை தங்கள் ஊழியர்கள் அனைவரும் நாளை கண்டுகளிக்க ஆகும் செலவை நிறுவனமே ஏற்கும் என்றும், நாளை முழு தினமும் 2.0 கொண்டாட்டம் தான் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ரஜினி நடித்துள்ள 2.O படத்தை தமிழ் ராக்கர்ஸ் உட்பட 12,567 இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close