[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தமிழக காவல்துறையின் அடுத்த டிஜிபியாக திரிபாதி அறிவிக்கப்பட வாய்ப்பு
  • BREAKING-NEWS தனி மனிதர்கள் மீதான கும்பல் தாக்குதலை ஒருபோதும் ஏற்கவும் முடியாது, நியாயப்படுத்தவும் முடியாது - பிரதமர் மோடி
  • BREAKING-NEWS ஜி.கே.வாசனுக்கு பக்கபலமாக திகழ்ந்தவர் கஸ்தூரி அம்மாள்; கஸ்தூரி அம்மாளை இழந்துவாடும் ஜி.கே.வாசனுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஆழ்ந்த இரங்கல் - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS அதிமுகவை அழித்து அமமுக வளர்ச்சி பெறுவது என்பது முடியாதது- தங்க தமிழ்ச்செல்வன்

“சாதியக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும்” - கார்த்திக் சுப்புராஜ்

inhuman-casteism-should-end-karthik-subbaraj

சாதியம் ஒழிக்கப்பட வேண்டும் என இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த சூடுகொண்டபள்ளியை சேர்ந்தவர் நத்திஷ். அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் சுவாதி. இருவரும் ஒருவரையொருவர் மனதார காதலித்துள்ளனர். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண் வீட்டில் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து பெற்றோர்கள் எதிர்ப்பை மீறி கடந்த சில மாதங்களுக்கு முன் நத்திஷ் மற்றும் சுவாதி பதிவு திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் மாற்று சாதி ஆணை திருமணம் செய்ததால் இளம் தம்பதிகள் படுகொலை செய்யப்பட்டனர். இதுதொடர்பாக பெண்ணின் தந்தை உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் கொலையில் தொடர்புடைய நால்வரை போலீசார் தேடி வருகின்றனர்.

 

இந்நிலையில் சாதியம் ஒழிக்கப்பட வேண்டும் என இயக்குநர் காத்திக் சுப்புராஜ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ட்விட்டர் பக்கத்தில், “ முன்னர் ராஜலெட்சுமி, இப்போது நத்திஷ்-சுவாதி தம்பதி. இந்தக் கொலைச் சம்பவங்கள் கொடுமையின் உச்சம். மனிதத்தன்மையற்ற சாதிய ரீதியிலான காட்டுமிராண்டித்தனங்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து வருகின்றன. இதற்கு உடனே முடிவுகட்ட வேண்டும். நாம் அனைவரும் இணைந்து சாதியக் கொடுமைகளை எப்படி ஒழிப்பது என்பதை கண்டுபிடிக்க வேண்டும்” எனக் கூறியுள்ளார்.

Advertisement:
Advertisement:
Advertisement:

[X] Close