[X] Close
JUST IN
  • BREAKING-NEWS அனைத்து அரசு துறைகளும் இணைந்து செயல்பட்டால் டெங்கு கொசு, காய்ச்சலை கட்டுப்படுத்தலாம் - உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து
  • BREAKING-NEWS ஈரோடு அருகே கோயிலில் சிலைகள் சேதப்படுத்தப்பட்டதில் 6 பேர் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS நவம்பர் 18-ஆம் தேதி தொடங்குகிறது குளிர்கால கூட்டத் தொடர்
  • BREAKING-NEWS தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு பலத்த மழை பெய்ய வாய்ப்பு
  • BREAKING-NEWS தொடர் மழை காரணமாக கன்னியாகுமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; சிவகங்கை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

’பிக்பாஸ்’ போட்டியாளர் மீது மோசடி புகார்

bigg-boss-contestant-booked-for-posting-fake-iphone-ad

பிரபல மாடல் பண்ட்கி கல்ரா. 11- வது ’பிக்பாஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற இவரது சமூக வலைத்தளப் பக்கத்தை ஏராளமானவர்கள் பின் தொடர்ந் து வருகின்றனர். இவர் சமீபத்தில் விளம்பரம் ஒன்றை தனது பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அதில், வெறும் 35 ஆயிரத்து ஐநூறு ரூபாய்க்கு ஐபோன் எக்ஸ் (iPhone X ) ரக போன்களை விற்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. சுமார் 90 ஆயிரம் மதிப்புக்கொண்ட போன், இவ்வளவு குறைவாகக் கிடை க்கிறதே என்று பலருக்கு ஆச்சரியம். 

பெங்களூரைச் சேர்ந்த யுவராஜ் சிங் யாதவ் என்பவர், ’பிக்பாஸ்’ போட்டியாளர் கல்ரா இதை ஷேர் செய்திருப்பதால் அதை நம்பினார். பின்னர் ’எனக்கு ரெண்டு வேணும்’ என்று புக் செய்தார். முன் பணமாக 13 ஆயிரத்தை டிரான்ஸ்பரும் செய்தார். பின்னர் சிறிது நேரத்தில் அந்த விளம்பரத்தை டெலிட் செய்துவிட்டார் கல்ரா. இதனால் யுவராஜ் அதிர்ச்சி அடைந்தார். பின்னர் யுவராஜூக்கு வாட்ஸப்பில் மெசேஜ் வந்தது. அதில் கண்டிப்பாக, ஃபோன்கள் கூரியர் மூலம் அனுப்பி வைக்கப்படும் என்று கூறப்பட்டிருந்தது. இதனால் நம்பிக்கையோடு இருந்தார் யுவராஜ். 

சொன்னது போலவே அந்த ஃபோன்கள் வந்தது. மீதித் தொகை 48 ஆயிரத்தை கொடுத்துவிட்டு அதை வாங்கினார். பிரித்துப் பார்த்தால் அதிர்ச்சி. ’ஐபோன் எக்ஸி’ன் டம்மி இரண்டு இருந்தது தெரிய வந்தது. தாம் ஏமாற்றப்பட்டோம் என்பதை உணர்ந்த யுவராஜ், குறிப்பிடப்பட்டிருந்த நம்பருக் கு போன் செய்தார். அவர்கள் அதை எடுக்கவே இல்லை. 

இது தொடர்பாக பெங்களூர் மரதஹள்ளி போலீஸ் ஸ்டேஷனின் புகார் செய்தார் யுவராஜ். வழக்குப் பதிவு செய்த போலீசார் பண்ட்கி கல்ராவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close