[X] Close
JUST IN
  • BREAKING-NEWS கவுரவ டாக்டர் பட்டம் பெற்றார் முதலமைச்சர் பழனிசாமி
  • BREAKING-NEWS நாங்குநேரி இடைத்தேர்தல் பணப்பட்டுவாடா விவகாரம்: திமுக எம்எல்ஏ சரவணகுமார் மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS தொடர் மழை: ஓராண்டுக்குப் பிறகு 100 அடியை எட்டியது பவானி சாகர் அணை
  • BREAKING-NEWS தமிழகத்தில் மேலும் நான்கு நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மையம் தகவல்
  • BREAKING-NEWS புரோ‌ கபடி லீக் தொடரில் பெங்கால் ‌வாரியர்ஸ் அணி ‌முதல் முறையாக சாம்பியன்‌. இறுதிப்போட்டியில் தபாங் டெல்லியை வீழ்த்தியது.

‘டைம்ஸ்’ பத்திரிகையில் இடம்பிடித்த நடிகை ஓவியா 

oviya-has-india-most-influential-person-in-2017

‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மூலம் அனைத்துத் தரப்பினராலும் விரும்பப்பட்டவர்  நடிகை ஓவியா. இவர் இந்திய அளவில் அதிகம் விரும்பத்தக்க பெண்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்.

‘களவாணி’, ‘முத்துக்கு முத்தாக’, ‘மெரினா’ என பல படங்களில் கதாநாயகி நடித்தும் அதிகம் புகழ் அடையாத ஓவியா, ‘பிக்பாஸ்’ நிகழ்ச்சியின் மூலம் புகழின் உச்சத்தை அடைந்தார். அதில் அவர் பயன்படுத்திய ‘ஷட் அப்’ வசனம் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் ஆனது. இந்நிகழ்ச்சியில் 80 நாட்கள் பங்கேற்ற ஓவியா, தன் உண்மை முகத்தை வெளிப்படுத்தினார். அவரது உண்மை முகம் அவருக்கு அதிக ரசிகர்களை சம்பாதித்து கொடுத்தது. அந்நிகழ்ச்சிக்கு அவர் மீண்டும் திரும்புவாரா என பலரும் ஆவலுடன் காத்திருந்தனர். அந்தளவுக்கு அமோக அன்பை சம்பாதித்தவர் ஓவியா.

இந்நிலையில் ‘டைம்ஸ்’ பத்திரிகை 2017ஆம் ஆண்டின் மிகவும் விரும்பத்தக்க பெண்களின் பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் நடிகை ஓவியாவுக்கு 28 ஆவது இடம் கிடைத்துள்ளது. இந்தப் பட்டியலில் உலக அழகி பட்டம் வென்ற மனுஷி ஷெல்லார் முதல் இடத்தையும் நடிகை தீபிகா படுகோன் 2ஆவது இடத்தையும் எமி ஜாக்சன் 6ஆவது இடத்தையும் நடிகை பிரியங்கா சோப்ரா 7 வது இடத்தையும் சன்னி லியோன் 8ஆவது இடத்தையும்  பிடித்துள்ளனர். அதேபோல் ‘கபாலி’ பட நாயகி ராதிகா ஆப்தே 43 ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close