[X] Close
JUST IN
  • BREAKING-NEWS ஐஎன்எக்ஸ் முறைகேடு வழக்கு: சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
  • BREAKING-NEWS சென்னையில் லாரி மூலம் விநியோகிக்கப்படும் மெட்ரோ நீரின் விலை அதிகரிப்பு
  • BREAKING-NEWS நாங்குநேரி பணப்பட்டுவாடா புகார் தொடர்பாக திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் மீது வழக்குப்பதிவு
  • BREAKING-NEWS அரசு அறிவிக்கும் சிறப்பு விடுமுறை தனியார் நிறுவனங்களுக்கு பொருந்தாது: உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS எல்லையில் பங்களாதேஷ் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு: பிஎஸ்எஃப் வீரர் ஒருவர் உயிரிழப்பு

14ம் தேதி ரிலீஸ் ஆகிறது ’மாயவன்’ 

c-v-kumar-s-directorial-maayavan-to-release-on-december-14

சி.வி.குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாயவன்’ திரைப்படம் வரும் 14ம் தேதி வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

அட்டகத்தி, பீட்சா, சூதுகவ்வும், தெகிடி, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை என பல வெற்றிப்படங்களை தயாரித்தவர் சி.வி.குமார். இவரது ‘திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்’ நிறுவனத்தின் மூலம் வெளியான பல படங்கள் தமிழ் சினிமாவில் தனித்த அடையாளங்களை ஏற்படுத்தின. ஏறக்குறைய வெற்றித் தயாரிப்பாளர் என இவரை ஒவ்வொரு மேடையிலும் பல திரை நட்சத்திரங்கள் புகழ்ந்துள்ளனர்.

இவர் முதன்முறையாக ‘மாயவன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சி.வி.குமார் கதை எழுதி, இயக்கி, தயாரித்துள்ள இப்படத்திற்கு ‘சூதுகவ்வும்’ இயக்குநர் நலன் குமாரசாமி திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். இதில் ஹீரோவாக சந்தீப் கிஷன் நடித்துள்ளார். நாயகியாக லாவண்யா திரிபாதி நடித்துள்ளார். மேலும் ஜாக்கி செராஃப், டேனியல் பாலாஜி, ஜெயப்பிரகாஷ், பகவதி பெருமாள், மைம் கோபி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கோபி அமர்நாத் ஒளிப்பதிவு செய்திருக்கிறார். லியோ ஜான் பால் படத்தொகுப்பு செய்துள்ளார்.

படத்தை வருகிற டிசம்பர் 14-ஆம் தேதி ரிலீஸ் செய்ய இருப்பதாக சி.வி.குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். மேலும் உங்களின் ஆதரவை நல்குங்கள் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close