[X] Close
JUST IN
  • BREAKING-NEWS தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான 3ஆவது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பேட்டிங்
  • BREAKING-NEWS நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனும் விவாதம் தேவையில்லாதது, மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும் - நடிகர் சிம்பு
  • BREAKING-NEWS சென்னை வரும் பிரதமர் மோடியை வரவேற்க முதல்வர், துணை முதல்வர் சென்னை விமான நிலையம் வருகை
  • BREAKING-NEWS ஏப்ரல்.4ஆம் தேதி நெடுவாசல் மக்களை சந்திக்க மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் முடிவு
  • BREAKING-NEWS இவ்வளவு நாட்களாக சத்ரியனாக பார்த்த என்னை இனி சாணக்கியனாக பார்க்க போகிறீர்கள்- டி. ராஜேந்தர்
  • BREAKING-NEWS அரிதாரம் பூசிய வண்ண பலூன்கள் பார்க்க நன்றாகத்தான் இருக்கும்- துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம்
  • BREAKING-NEWS நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கிய கச்சத்தீவு அந்தோணியார் கோயில் திருவிழா நிறைவு

வாழ்க்கை ஒரு வட்டம்: சொல்கிறார் விஷால் 

life-is-circle-vishal-comments

வாழ்க்கை ஒரு வட்டம் என்று தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தற்சமயம் விஷால் நடித்து வரும் திரைப்படம் இரும்புத் திரை. இந்தப் படம் இந்த வருட பொங்கலுக்கே வெளியாக வேண்டியது. ஆனால் நடிகர் சங்க வேலை மற்றும் தயாரிப்பாளர் சங்கப் பணி என்று விஷால் மும்முரமாக இருந்ததால் வெளியீடு தள்ளிப்போனது. இப்போது இதன் படப்பிடிப்பு வேலைகள் மழையை கூட பொருட்படுத்தாமல் நடைபெற்று வருகிறது. 
இந்நிலையில் விஷால் இப்படத்தில் அர்ஜூனுடன் சேர்ந்து நடிக்கும் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் வெளியிட்டு இருக்கிறார். அதில் அவர் “என்னுடைய திரையுலக வாழ்க்கையே ஒரு வட்டமாகத்தான் தெரிகிறது. நான் யாரிடம் முதலில் உதவி இயக்குநராக சேர்ந்து என் வாழ்க்கையின் முதல் ஊதியத்தை பெற்றோனோ அவரே எனக்கு வில்லனாக இரும்புத்திரை படத்தில் நடிக்கிறார். 
ஆனால் இப்போதும் அவர்தான் எனக்கு குரு. அவர்தான் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன். இது ஒரு உயிரோட்டமான பயணம். நாங்கள் படத்தில் சந்தித்துக் கொள்ளும் காட்சிகள் அனைத்துமே ரசிகர்களை சீட் நுனிக்கே கொண்டு வரும். முக்கியமாக க்ளைமாக்ஸில் நாங்கள் இருவரும் மோதிக்கொள்ளும் சண்டைக்காட்சி. எங்கள் இணையைக் காண காத்திருங்கள்” என்று தெரிவித்திருக்கிறார்.
இப்படத்தை இயக்குநர் மித்ரன் இயக்குகிறார். இதில் சமந்தா, ரோபோ ஷங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். ஜார்ஜ் சி. வில்லியம்ஸ் ஒளிப்பதிவில் உருவாகும் இப்படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close