[X] Close
JUST IN
  • BREAKING-NEWS திமுக எம்.பி.க்கள் இந்தி படித்துவிட்டு தமிழ் வாழ்க என கூறி மக்களவையில் பதவியேற்றுள்ளனர்; எங்களுக்கு அவ்வாறு நடிக்க தெரியாது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS குடிநீர் பிரச்னைகள் இருக்கும் அனைத்து இடங்களிலும் லாரி மூலம் தேவையான அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது - முதல்வர் பழனிசாமி
  • BREAKING-NEWS பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கும் என்பதால், எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் நடிகர் சங்க தேர்தலை நடத்த அனுமதிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
  • BREAKING-NEWS ஆவடி நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்தி அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
  • BREAKING-NEWS ராஜஸ்தானை சேர்ந்த எம்.பி. ஓம் பிர்லா, மக்களவை சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்
  • BREAKING-NEWS பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயல் தலைவராக ஜெ.பி.நட்டா தேர்வு செய்யப்பட்டார்
  • BREAKING-NEWS சென்னை பரங்கிமலை மெட்ரோ ரயில் நிலையத்தில் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்ட கழிவறை தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு திறக்கப்பட்டது

ரஜினியின் ’2.ஓ’ மேங்கிங் டீசர்: ஆச்சரியத்தில் பிரபலங்கள்!

2-0-making-teaser-create-history

’2.ஓ’ படத்தின் மேக்கிங் டீசருக்கு சமூக வலைத்தளங்களில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான 15 மணி நேரத்தில் இரண்டரை மில்லியன் பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது.

ரஜினிகாந்த், அக்‌ஷய் குமார், எமி ஜாக்சன் உட்பட பலர் நடித்துள்ள படம், ‘2.ஓ’. ஷங்கர் இயக்கியுள்ள இந்தப் படத்தை லைகா புரொடக்‌ஷன்ஸ் சுமார் 400 கோடி ரூபாய் செலவில் தயாரித்துள்ளது. படத்துக்கு நீரவ் ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார். ஜனவரி மாதம் வெளியாக உள்ள இந்தப் படத்தின் மேக்கிங் டீசரை இயக்குனர் ஷங்கர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நேற்று மாலை வெளியிட்டார். 1.47 நிமிடம் மட்டுமே ஓடக் கூடிய இந்த மேக்கிங் டீசர் வெளியான அடுத்த நிமிடமே சமூக வலைத்தளங்களில் பரபரப்பை கிளப்பியது. 

ஆன்லைனில் அமோக வரவேற்பை பெற்ற இந்த டீசர், வெளியான 15 மணி நேரத்துக்குள் இரண்டரை மில்லியன் பார்வையாளர்களை நெருங்கிக்கொண்டிருக்கிறது.  மேக்கிங் டீசர் ஒன்றுக்கு இந்த அளவு வரவேற்பு கிடைத்திருப்பது இதுவே முதல் முறை. இந்த டீசரை கண்டு வியப்படைந்துள்ள நடிகர், நடிகைகள் உள்ளிட்ட சினிமா பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர். 

Advertisement:
இது தொடர்பான செய்திகள் :
Advertisement:
Advertisement:
[X] Close