[X] Close
JUST IN
 • BREAKING-NEWS சித்த மருத்துவர்களின் மேற்பார்வையில் நிலவேம்பு குடிநீர் வழங்கப்படுகிறது: சுகாதாரத்துறை செயலர்
 • BREAKING-NEWS பாஜகவில் இருந்து விஜய்க்கு முதல் ஆதரவு
 • BREAKING-NEWS டெங்கு காய்ச்சலை பரப்பும் கொசு புழு உருவாகாமல் மக்கள் தடுக்க வேண்டும்: முதலமைச்சர் பழனிசாமி
 • BREAKING-NEWS மெர்சல் தயாரிப்பாளர், நடிகர்களை பாஜக மிரட்டுவதாக புகார் தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூ.கண்டனம்
 • BREAKING-NEWS சாதனை படைத்த மெர்சல்: ஒரே நாளில் ரூ.33 கோடி வசூல்
 • BREAKING-NEWS ஜிஎஸ்டியால் நாட்டில் பொருளாதார புரட்சி நடந்து வருகிறது: தமிழிசை சவுந்தரராஜன்
 • BREAKING-NEWS நான் ராஜினாமா செய்ததாக வெளியான தகவல் முற்றிலும் பொய்: திருநாவுக்கரசர்
 • BREAKING-NEWS ஜோசப் விஜயின் மோடி வெறுப்பே மெர்சல்: ஹெச். ராஜா
 • BREAKING-NEWS பொறையார் விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தலா ரூ.7.5 லட்சம் நிதியுதவி: முதலமைச்சர்
 • BREAKING-NEWS மெர்சலில் அரசியல் விமர்சனங்களை தொடங்கியிருப்பது சினிமாதுறைக்கும், அரசியலுக்கும் நல்லதல்ல: பொன்.ராதா
 • BREAKING-NEWS டெல்லியில் பட்டாசு வெடிக்க, விற்க உச்சநீதிமன்றம் தடை விதித்ததால் காற்று மாசு குறைந்தது
 • BREAKING-NEWS டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்: திருமா
 • BREAKING-NEWS பொறையார் போக்குவரத்துக் கழகம் அருகே தொழிற்சங்கத்தினர் போராட்டம்
சினிமா 29 Jul, 2017 11:43 AM

நடிக்க வந்ததால அதெல்லாம் போச்சு: கேத்தரின் தெரசா வருத்தம்!

i-was-a-very-shy-child-catherine-tresa

தமிழில், மெட்ராஸ், கதகளி, கணிதன், கடம்பன் படங்களில் ஹீரோயினாக நடித்திருப்பவர் கேத்தரின் தெரசா. இப்போது விஷ்ணு விஷால் நடிக்கும் ’கதாநாயகன்’ படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். 

துபாயில் பிறந்து வளர்ந்த இவர் கூறும்போது, ’அங்கு படிக்கும் போது பியானோ, பாடல்கள் எல்லாவற்றையும் கற்றுவந்தேன். ஏதோ போனோம் வந்தோம் என்றில்லாமல் படிப்பிலும் நான் டாப் லெவலில்தான் இருந்தேன். சின்ன வயதில் கூச்ச சுபாவம் கொண்டவளாகத்தான் இருந்தேன். பிறகு கூட்டத்தில் பழகி பேசி என்னை நானே உயர்த்திக்கொண்டேன். கல்லூரி படிப்பிற்காக நான் இந்தியா வந்தேன். இதன் காரணமாக எனது பியானோ, பாடல் பயிற்சி எல்லாம் போய்விட்டது. சினிமாவுக்கு வந்து தமிழில் கார்த்தி, தெலுங்கில் அல்லு அர்ஜுன், மலையாளத்தில் பிருத்விராஜ், கன்னடத்தில் உபேந்திரா போன்ற டாப் ஹீரோக்களுடன் நடித்துவிட்டேன். இது என் அதிர்ஷ்டம்தான். அடுத்து தேஜா இயக்கத்தில் ராணாவுடன் ’நான் ஆணையிட்டால்’ படத்தில் நடித்துள்ளேன். இந்தப் படம் ஆகஸ்ட் 11-ம் தேதி ரிலீஸ் ஆகிறது. இந்திக்கு செல்லும் வாய்ப்பிருக்கிறதா? என்று கேட்கிறார்கள். எனக்கு இதுவே போதுமானதாக இருக்கிறது. அதனால் அங்கு செல்லும் எண்ணமில்லை’ என்றார். 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close