[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு கடந்த 4 நாட்களில் 1 லட்சம் பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS பத்திரிகையாளர் கொலை வழக்கில் சாமியார் குர்மீத் ராம் ரஹீமிற்கு ஆயுள் தண்டனை விதிப்பு - பஞ்ச்குலா சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பு
  • BREAKING-NEWS திருச்சி: மணப்பாறை அருகே ஆவாரங்காடு ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், பார்வையாளர்கள் என 71பேர் காயம்
  • BREAKING-NEWS சென்னை வண்டலூர் பூங்காவில் காணும் பொங்கலை முன்னிட்டு 3 மணி நிலவரப்படி 40,000பேர் வருகை தந்துள்ளனர் - பூங்கா நிர்வாகம்
  • BREAKING-NEWS குஜராத்: அகமதாபாத்தில் வல்லபாய் படேல் மருத்துவ அறிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் திறப்பு
  • BREAKING-NEWS பரபரப்பான அரசியல் சூழலில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டம் நாளை மறுநாள் நடக்கிறது; காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கு பாஜக பேரம் பேசுவதாக கூறப்படும் நிலையில் ஆலோசனை நடைபெறவுள்ளது
  • BREAKING-NEWS காணும் பொங்கலையொட்டி சென்னையில் நாளை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்; சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள சுற்றுலாத்தளங்களுக்கு 480 சிறப்பு பேருந்துகள் இயக்கம் - மாநகர போக்குவரத்துக்கழகம்

விவேகம் ஷூட்டிங்... நடுங்கிய அஜீத்..!

ajith-shivered-during-vivegam-shoot


விவேகம் ஷூட்டிங்கில் நடந்த அனுபவங்களையும், அஜீத்துக்கு ஏற்பட்ட சிரமங்களையும் பகிர்ந்து கொள்கிறார் அப்படத்தின் ஒளிப்பதிவாளரான வெற்றி. 
’பல்கேரியாவில் ஷூட்டிங் நடைபெற்றது. அப்போது ஒருநாள் முக்கியமான காட்சியை படமாக்கினோம். அங்குள்ள மக்கள் அப்போது மழை வரப்போவதாக கூறினர். ஆனாலும் அந்தக் காட்சியை அன்றே எடுத்தாக வேண்டும். அன்று வியாழக்கிழமையும் கூட... என்ன செயவதென்று எங்களுக்குப் புரியவில்லை. மழை வந்துவிடக்கூடாது என அனைவரும் வேண்டினோம். எங்கள் வேண்டுதல் பலித்தது. நாங்கள் எடுக்க வேண்டிய அனைத்துக் காட்சிகளையும் ஷூட் செய்து முடித்து விட்டுக் கிளம்பிய பிறகே மழை பெய்யத் தொடங்கியது. அதேபோல மற்றொரு முக்கிய சம்பவத்தை சொல்லியே ஆக வேண்டும். 10 டிகிரி வெப்ப நிலையில் தான் பல்கேரியாவில் ஷூட்டிங்க் முழுவதும் நடந்தது. கடும் குளிர். படக்குழுவினர் அனைவரும் பனியை தாங்கிகொள்ளும் அளவிற்கு எங்கள் உடம்பை  மறைத்துக் கொண்டோம். ஆனாலும் பனி வாட்டியது. அஜீத் சார் அந்தக் குளிரிலும் பல காட்சிகளில் கிழிந்த சட்டையோடு மட்டுமே நடித்தார். 10 டிகிரி குளிர்ச்சியில் மற்றவர்கள் யாரும் இப்படி நடித்திருக்க மாட்டார்கள். அத்தனை சிரமங்களையும் தங்கிக் கொண்டு சிறப்பாக நடித்தார். ஷாட் முடிந்த உடன் நடுங்க ஆரம்பித்து விடுவார் அஜீத்’ என்கிறார் வெற்றி. 
விவேகம் படத்தின் படப்ப்டிப்பு முழுவதும் நிறைவடைந்து விட்டது. தற்போது போஸ்ட் ப்ரடெக்சன் பணிகள் நடைபெற்று வருகிறது. இசையமைப்பாளர் அனிருத் பின்னணி இசைக்கோர்ப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்தப்படம் ஆகஸ்ட் 10ம் தேதி வெளியாக இருக்கிறது.  
 

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close