[X] Close
JUST IN
  • BREAKING-NEWS வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் - வானிலை ஆய்வு மையம்
  • BREAKING-NEWS சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் அக்டோபர் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்
  • BREAKING-NEWS நீட் ஆள் மாறாட்ட புகாரில் தொடர்புடைய மாணவர் உதித் சூர்யாவை தேடி தேனியிலிருந்து தனிப்படை காவல்துறையினர் 5பேர் சென்னை வருகை
  • BREAKING-NEWS தாய்மொழிக்கு பதிலாக இந்தியை கற்க வேண்டும் என கூறவில்லை - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா
  • BREAKING-NEWS இந்தி திணிப்புக்கு எதிராக நாளை திமுக நடத்தவிருந்த போராட்டம் ஒத்திவைப்பு. ஆளுநரின் உறுதிமொழியை ஏற்று முடிவு எடுக்கப்பட்டதாக ஸ்டாலின் அறிவிப்பு

மீண்டும் அவதாரம் எடுக்கிறார் ஜேம்ஸ் கேமரூன்..!

avatar2-release-date-announced

அனைவராலும் பல வருடங்களாக எதிர்பார்க்கப்பட்ட அறிவிப்பை 20th சென்சுரி ஃபாக்ஸ் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் அவதார்-2 திரைப்படம் எடுக்கப்படவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. ‘அவதார்-2’ ஆம் பாகம் 2018 ஆம் ஆண்டு டிசம்பர் 21 அன்று ரிலீஸ் ஆகும் என்றும் இதற்கான முதற்கட்ட வேலை துவங்கப்படவுள்ளதாகவும் செய்தியை வெளியிட்டுள்ளது 20th சென்சுரி ஃபாக்ஸ்.

அதுமட்டுமில்லாமல் அவதார்- 3, 4, 5ஆம் பாகங்களும் தயாரிக்கப்படும் என்றும் முறையே அவை 2020, 2022, 2023ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்றும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. ‘அவதார்-2’ ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளியானதே கேமரூன் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய நிலையில் இன்னும் மூன்று பாகங்கள் வரும் என்ற தகவல் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close