[X] Close
JUST IN
  • BREAKING-NEWS உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க திமுகவுக்கு தெம்புள்ளதா என முதலமைச்சர் பழனிசாமி கேள்வி
  • BREAKING-NEWS தேசிய குடியுரிமை திருத்த மசோதாவை மக்களவையில் இன்று தாக்கல் செய்கிறார் அமித் ஷா
  • BREAKING-NEWS கிராமப்புற உள்ளாட்சிப் பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்

மீண்டும் இணையும் ராஜேஷ்-சந்தானம் கூட்டணி

santhanam-to-join-hands-with-director-rajesh

சந்தானம், இயக்குனர் ராஜேஷுடன் மீண்டும் கைகோர்க்க இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

‘சிவா மனசுல சக்தி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜேஷ். அதைத்தொடர்ந்து, பாஸ் என்கிற பாஸ்கரன், ஒரு கல் ஒரு கண்ணாடி, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க போன்ற ராஜேஷின் தொடர்ச்சியான படங்களில் சந்தானம் தவறாமல் இடம்பிடித்திருந்தார். இதனால் ராஜேஷின் ஆஸ்தான காமெடியன் என்ற இடத்தை சந்தானம் பிடித்திருந்தார். அதன்பின்னர் காலங்கள் மாறின, காமெடியனிலிருந்து ஹீரோ அவதாரம் எடுத்த சந்தானம், காமெடி வேடங்களில் நடிப்பதைத் தவிர்த்து வந்தார். இந்த சூழலில் சந்தானத்தை ஹீரோவாக வைத்து ராஜேஷ் புதுப்படத்தை இயக்க உள்ளதாக கோடம்பாக்கத்தில் ஒரு தகவல் உலா வருகிறது. சர்வர் சுந்தரம் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கியிருக்கும் சந்தானம், சக்கபோடு போடுராஜா, ஓடி ஓடி உழைக்கணும் என பிஸியாக இருக்கிறார். மேலும், செல்வராகவன் இயக்கும் புதிய படத்திலும் ஹீரோவாக ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படங்களை முடித்த பின்னர் ராஜேஷ் இயக்கும் படத்தில் சந்தனம் நடிப்பார் என்று தெரிகிறது. அனேகமாக இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement:
Advertisement:
Advertisement:
[X] Close