[X] Close

என்ன ரபாடாவுக்கு பவுன்சர் வீச தெரியலையா! - சுனில் கவாஸ்கரை ட்ரோல் செய்த பென் ஸ்டோக்ஸ்

ஐபிஎல் திருவிழா

RR-Player-Ben-Stokes-Trolled-Sunil-Gavaskar-s-Commentary-via-tweet

நடப்பு ஐபிஎல் சீசனில் போட்டிகளை முத்தாய்ப்பாக வர்ணிக்கும் பணியை கவனித்து வருகிறார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர். அவர் பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தை வர்ணித்திருந்தார். அப்போது டெல்லி வீரர் ரபாடா வீசிய பவுன்சரில் துல்லியம் இல்லை என விமர்சித்திருந்தார் கவாஸ்கர். அதனை TROLL செய்துள்ளார் பென் ஸ்டோக்ஸ். 


Advertisement

“இது ஒரு மோசமான பவுன்சர். நீங்கள் துல்லியமாக பவுன்சர் வீச விரும்பினால் அது ஆப் ஸ்டெம்ப் திசையில் வீச வேண்டும்” என சொல்லியிருந்தார் கவாஸ்கர். அதனை தான் ஸ்மைலி மூலம் TROLL செய்துள்ளார் ஸ்டோக்ஸ். அந்த ஸ்மைலி முகத்தை கையால் அடித்துக் கொள்வது போல இருந்தது. 

நடப்பு சீசனில் பென் ஸ்டோக்ஸ் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடினார். இருப்பினும் காயம் காரணமாக தொடரிலிருந்து விலகி உள்ளார். 


Advertisement

Advertisement
[X] Close