தொழில்நுட்ப பிழை காரணமாக தேசிய விருது பட்டியலில் ’ஒத்த செருப்பு’ படத்தில் பங்காற்றிய தொழில்நுட்பக் கலைஞரின் பெயர் பெயர் விடுபட்டுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.
பார்த்திபன் இயக்கி நடித்த 'ஒத்த செருப்பு - சைஸ் 7' படத்தின் ஒலிக் கலவைக்காக (Sound mixer) ரெசுல் பூக்குட்டிக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இந்த விருது அறிவிக்கப்பட்டதும், விருதை இன்னொரு நபர் உடன் பகிர்ந்துகொள்ள விரும்புவதாக ரெசுல் பூக்குட்டி அறிவித்திருந்தார். அப்படி அறிவிக்க காரணம், ரெசூல் பூக்குட்டி உடன் இணைந்து 'ஒத்த செருப்பு' படத்தின் ஒலிக் கலவையில் உழைத்தவர் பிபின் தேவ் என்பவரும்தான். இருவரும் இணைந்துதான் ஒலிக் கலவை ஏற்படுத்தி இருந்தனர்.
ஆனால், ரெசூல் பூக்குட்டிக்கு மட்டுமே விருது அறிவிக்கப்பட்டிருந்தது. விசாரிக்கையில், தொழில்நுட்ப கோளாறு காரணமாக பிபின் தேவ் பெயர் விருதுப் பட்டியலில் இடம்பெறவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில தொழில்நுட்ப பிழை காரணமாக பிபின் தேவ் பெயர் விருது விண்ணப்பத்திலிருந்து விலக்கப்பட்டிருந்தது. இருப்பினும், விருதுகள் அறிவிக்கப்பட்டவுடன், ரெசுல் பூக்குட்டி தனது வலைதளப் பக்கத்தில் மறக்காமல் பிபின் பெயரை சொல்லி விருதைப் பகிர்ந்துகொள்வதாக அறிவித்திருக்கிறார்.
மேலும், 'பிபின் ஆதரவு இல்லாமல் அற்புதமாக இந்த வேலையைச் செய்திருக்க முடியாது. பிபின் தேவ் தனது முயற்சிகள் அங்கீகரிக்கப்பட்டதில் மகிழ்ச்சியடைந்துள்ளார். சில தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக அவரது பெயர் தவிர்க்கப்பட்டிருப்பதை உறுதிப்படுத்தினேன்.
இதுகுறித்து தயாரிப்பாளருடன் பேசினேன். விருது பெற்றோர் பட்டியலில் பிபின் பெயரையும் சேர்க்குமாறு அதிகாரிகளிடம் கோரினேன். ஒரு கடிதத்தை தர தயாரிப்பாளர் ஏற்பாடுகளை செய்து வருகிறார்" என்று ஆஸ்கர் விருது பெற்ற கலைஞரான ரெசூல் பூக்குட்டி குறிப்பிட்டுள்ளார்.
ரெசூல் பூக்குட்டியை போலவே பிபின் தேவ்வுக்கும் கேரளாதான் பூர்வீகம். அங்கமாலியைப் பூர்வீகமாகக் கொண்ட பிபின் தேவ் மும்பையில் இருந்து தற்போது பணிபுரிந்து வருகிறார். பல படங்களில் தனியாக பணியாற்றி வரும் பிபின் பூக்குட்டி கேட்டுக்கொண்டதற்கு இணங்க, இந்தப் படத்தில் இணைந்து பணியாற்றியதாக கூறப்படுகிறது.
Loading More post
ஜப்பான் சென்றார் பிரதமர் மோடி: அமெரிக்க அதிபருடன் முக்கிய ஆலோசனை
கோலாகலமாக நடைபெற்றது தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேசம்
கோவை: மணமக்களுக்கு தக்காளியை பரிசாக வழங்கிய விஜய் மக்கள் இயக்கத்தினர்!
சென்னையில் அனுமதியின்றி நினைவேந்தல் நடத்தியதாக திருமுருகன் காந்தி உட்பட 500 பேர் கைது
ஓஎன்ஜிசி குழாயில் உடைப்பு: விவசாய நிலங்கள் பாதிப்படைவதாக விவசாயிகள் வேதனை!
குடியரசு தலைவர் தேர்தலுக்கான வியூகமா?.. சந்திரசேகர ராவின் சந்திப்புகள் சொல்வதென்ன? - அலசல்
உயர்த்தும் போது செஸ்! குறைக்கும்போது கலால்! தமிழக நிதியமைச்சர் குற்றச்சாட்டின் முழு விவரம்
எளியோரின் வலிமைக் கதைகள் 31: ஊரையே சுத்தம் செய்தாலும் வாசமில்லா வாழ்க்கை
தோனி மட்டும் இன்னும் கொஞ்சம் வேகமாக ஆடியிருந்தால்.. சிஎஸ்கே வெற்றியை தட்டிப்பறிந்த அஸ்வின்