[X] Close

கடலூர்: "கலெக்டர் அலுவலகம் அருகிலுள்ள எங்களுக்கே இந்த நிலைமை?! - மக்கள் குமுறல்

மக்கள் வாய்ஸ்

Cuddalore---Is-this-the-situation-near-us-near-the-Collector-s-Office-------people-voice

வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் கடலூர் மாவட்டத்திலுள்ள சட்டமன்ற தொகுதிகளிலுள்ள மக்களின் மனவோட்டம் என்னவாக இருக்கிறது?


Advertisement

9 சட்டப்பேரவைத் தொகுதிகளை உள்ளடக்கிய கடலூர் மாவட்டத்தில் 5 தொகுதிகள் அதிமுக வசமும், 4 தொகுதிகள் திமுக வசமும் உள்ளன.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அரசியல் பிரவேசம் தொடங்கிய தொகுதிதான் கடலூர். 1982-ம் ஆண்டு அதிமுகவின் உறுப்பினராகச் சேர்ந்த ஜெயலலிதாவை, கடலூரில் நடந்த கட்சி மாநாடு ஒன்றில் மேடையில் ஏற்றி அறிமுகப்படுத்தினார் எம்.ஜி.ஆர். அம்மாநாட்டில் 'பெண்ணின் பெருமை' என்ற தலைப்பில் பேசிய ஜெயலலிதாவுக்கு சில மாதங்களில் கட்சியின் கொள்கைப் பரப்புச் செயலாளர் பதவியை அளித்துப் பெருமை சேர்த்தார் எம்.ஜி.ஆர்.


Advertisement

இப்படி வரலாற்றுச் சுவராஸ்யம் மிக்க கடலூர் தொகுதியில் இதுவரை திமுக 5 முறையும், அதிமுக 3 முறையும், காங்கிரஸ் 1 முறையும் வெற்றி பெற்றுள்ளன. கடந்த இரு தேர்தல்களிலும் இங்கே வெற்றி வாகை சூடியவர் தற்போதைய தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத்.

கடலூர் மாவட்டத்தில் விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில்கள் பிரதானமானவை ஆகும். மேலும் இங்கு குடிசை தொழிலாக நடந்து வரும் பொம்மை தொழிலும் பிரசித்தி பெற்றதாகும். அதிமுக, திமுக சம பலத்தில் உள்ள கடலூர் தொகுதியில் வன்னிய சமூகத்தினர், பட்டியலின சமூகத்தினர் சம அளவில் உள்ளனர்.

வரவிருக்கும் தேர்தலில் கடலூர் தொகுதி மக்களின் மனவோட்டம் என்னவாக இருக்கிறது? அவர்களிடமே கேட்டோம்..


Advertisement

"ஒரு மீனவனாக சொல்லவில்லை, பொதுமக்களில் ஒருவனாக சொல்கிறேன். இந்த அரசியல்வாதிகள் மக்களுக்கு எதுவுமே பண்ணவில்லை. சுனாமி நினைவு தினத்தன்று மலர் அஞ்சலி செலுத்துவதற்காக மட்டும் அரசியல்வாதிகள் வருகிறார்கள். மற்ற நாட்களில் இந்த தொகுதி கண்டுகொள்ளப்படுவதில்லை."

image

"ஒவ்வொரு வருடமும் மழைக்காலங்களில் தண்ணீர் தெருக்களில் தேங்கி நிற்கிறது. வடிகால் வசதி கிடையாது. கலெக்டர் அலுவலகத்திற்கு மிக அருகில் இருக்கும் இந்த பகுதியிலேயே எந்த வசதியும் இல்லையென்றால் தொகுதியின் மற்ற பகுதிகளில் எப்படி இருக்கும் என யோசித்துப் பாருங்கள்."

"மழை பாதிப்பு நாட்களில் வடிகால் வசதி செய்து தருகிறோம், சாலை வசதி அமைத்து தருகிறோம் என்று சொல்லிவிட்டு செல்கிறார்கள். ஆனால் யாரும் செயல்படுத்துவதில்லை."

"எங்கள் ஊரில் சுகாதார சீர்கேடு தீராத பிரச்சினையாக உள்ளது. ஓட்டு கேட்டு வருபவர்கள் முதலில் இந்த நாற்றமடிக்கும் குப்பைகளை அகற்றிவிட்டு வரட்டும்."

"கடலூரில் உட்கட்டமைப்பு வசதி மோசமான நிலையில் உள்ளது. மாவட்ட தலைநகரில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. கிராமங்களில் நிலைமை இதைவிட மோசம்."

பல கோடி ரூபாய்க்கு மேல் வர்த்தகம் நடைபெறும் மீன்பிடித் தொழிலை அடுத்த கட்டத்திற்கு கொண்டுசெல்ல தமிழகத்தில் இதுவரை எந்த அரசும் முன்வரவில்லை என்பது இங்குள்ள மீனவர்களின் குற்றச்சாட்டு. மேலும் முகத்துவாரப் பகுதியில் தூண்டில் வளைவு அமைத்து மண்ணரிப்பை தடுக்க வேண்டும் என்ற தங்களின் கோரிக்கையை கூட யாரும் கண்டுகொள்ளவில்லை என்கிறார்கள் மீனவர்கள்.

ரயில்வே மேம்பாலம் அமைத்துத்தர வேண்டும்; குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்; பாதாள சாக்கடைத் திட்டத்தை முறைப்படுத்த வேண்டும்; குடியிருப்புப் பகுதிகளில் வடிகால் வசதியை உறுதி செய்ய வேண்டும்; குப்பைகளை அகற்ற வேண்டும்; கடலின் முகத்துவாரப் பகுதிகளில் தூண்டில் வளைவு அமைத்துத்தர வேண்டும் ஆகிய நீண்டகால கோரிக்கைக்களுக்கு தீர்வு எப்போது என ஏங்குகின்றனர் கடலூர் தொகுதி மக்கள்.

அரசியல்வாதிகளை அரியணையில் அமர வைக்கிற அடித்தட்டு மக்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய இங்கே யாருமே இல்லை என்பதுதான் இந்த தொகுதி மக்களின் குமுறல்கள். ஒவ்வொரு முறையும் தேர்தல் வருகிறது. இந்த முறையாவது நம்முடைய பிரச்னைகள் எல்லாம் தீராதா என்கிற ஏக்கம் அலையடித்துக் கொண்டே இருக்கிறது.


Advertisement

Advertisement
[X] Close