Published : 04,Feb 2021 10:58 AM

சென்னையில் நாளை இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்: அணியில் இருக்கப்போவது யார்?

Indias-likely-playing-11-for-1st-test-against-England-in-Chennai

இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.

இங்கிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்டுகள், 5 டி20, 3 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் இரு டெஸ்டுகள் சென்னையில் பிப்ரவரி 5 முதல் 9ம் தேதி வரையும், பிப்ரவரி 13 முதல் 17ம் தேதி வரையும் நடைபெறுகின்றன. 3-ஆவது டெஸ்ட் பிப்ரவரி 24 முதல் 28ம் தேதி வரையும், கடைசி டெஸ்ட் மார்ச் 4 முதல் 8ம் தேதி வரை அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது. இதையடுத்து 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடர் அகமதாபாத்திலும் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடர் புனேவிலும் நடைபெறவுள்ளன.

image

இந்நிலையில் முதல் டெஸ்டில் இடம் பெற இருக்கும் இந்திய அணியின் 11 வீரர்கள் யார் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. முதல் டெஸ்ட் போட்டியில் இடம்பெறுவதற்கு கடுமையான போட்டியே நிலவுகிறது என கூறலாம். ஆனால் முதல் டெஸ்ட்டில் ஹர்திக் பாண்ட்யா இடம்பெறமாட்டார் என்றே கணிக்கப்படுகிறது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா, சுப்மன் கில் ஆகியோர் களமிறக்கப்படுவார்கள். பின்பு 3 ஆவது இடத்துக்கு புஜாராவும், 4 ஆவதாக கேப்டன் விராட் கோலியும் இறங்குவார்கள். இதற்கடுத்து 5 ஆவது பேட்ஸ்மேனாக துணைக் கேப்டன் ரஹானே பேட் செய்வார்.

image

விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் 6 ஆம் இடத்திலும், 7 ஆவது இடத்தில் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் களம் காண்பார். சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமானது என்பதால் ஹர்திக் பாண்ட்யாவைவிட வாஷிங்டன் சுந்தரையே தேர்வாளர்கள் விரும்புவார்கள். அதன் பின்பு சுழற்பந்து வீச்சாளர்கள் ரவிசந்திரன் அஸ்வினும், குல்தீப் யாதவும் அணியில் இருப்பார்கள். வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ராவும், இஷாந்த் சர்மாவும் சேர்கக்ப்படுவார்கள். சென்னை ஆடுகளத்தின் தன்மை காரணமாக டெஸ்ட் போட்டியில் 3 சுழற்பந்துவீச்சாளர்கள், 2 வேகப்பந்து வீச்சாளர்கள் என இந்தியா களமிறங்கும் என கூறப்படுகிறது.

image

இந்தியா 11 பேர் கொண்ட உத்தேச அணி:

சுப்மன் கில்
ரோகித் சர்மா
புஜாரா
கோலி
ரஹானே
ரிஷப் பன்ட்
வாஷிங்டன் சுந்தர்
அஸ்வின்
குல்தீப் யாதவ்
பும்ரா
இஷாந்த் சர்மா