இலங்கை அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் ஜிம்பாப்வே அணி 262 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.
கொழும்புவில் நடந்துவரும் இந்த போட்டியில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 356 ரன்களும், இலங்கை அணி 346 ரன்களும் எடுத்தன. இதையடுத்து 10 ரன்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய ஜிம்பாப்வே அணி 23 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து சீன் வில்லியம்ஸுடன் கைகோர்த்த சிக்கந்தர் ராசா அணியை சரிவிலிருந்து மீட்க முயற்சி செய்தார். சீன் வில்லியம்ஸ் 22 ரன்களில் வெளியேற 59 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து ஜிம்பாப்வே அணி தடுமாறியது.
இந்தநிலையில், 6ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சிக்கந்தர் ராசா - பீட்டர் மோர் இணை 84 ரன்கள் குவித்தது. பீட்டர் மோர் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதனால் ஜிம்பாப்வே அணி 200 ரன்களை எட்டுவதே கடினம் என்று கணிக்கப்பட்ட நிலையில், சிக்கந்தர் ராசாவுடன் இணைந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மால்கம் வாலெர் மூன்றாம் நாள் இறுதிவரை விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். மூன்றாம் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி 6 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்தது. சிக்கந்தர் ராசா 97 ரன்களுடனும், மால்கம் வாலெர் 57 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இதன்மூலம் இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட ஜிம்பாப்வே அணி 262 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. ஒருநாள் தொடரை இழந்தநிலையில், ஒரு போட்டி மட்டுமே கொண்ட டெஸ்ட் தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இலங்கை அணி விளையாடி வருகிறது.
Loading More post
`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
நேபாளத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு - புத்தர் பிறந்த இடத்தில் வழிபாடு
பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள்: வைரல் வீடியோ
இலங்கை தமிழர் நிவாரண நிதி: திண்டுக்கல் ஆட்சியரிடம் ரூ.10 ஆயிரம் வழங்கிய யாசகர்
``செத்து மடிந்த பிறகு தான் நாங்கள் இந்துவாக தெரிகிறோமா?”- அண்ணாமலைக்கு சீமான் கேள்வி
விபத்தில் உயிரிழந்த ஆண்ட்ரூ சைமண்ட்ஸ் பற்றிய 5 அரிய தகவல்கள்!
எளியோரின் வலிமைக் கதைகள் 30: ‘நேரம் பாராமல் ஓடும் இவர்களின் வாழ்க்கையில் விடியல் எப்போது?’
தெலங்கனா மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாகும் நடிகர் பிரகாஷ் ராஜ்? - வெளியான தகவல்
“சிறப்பான விஷயம் நடக்கப்போகிறது என்று நினைத்தோம்.. ஆனால்” - கோலி குறித்து மைக் ஹெசன்
’டான்’ விமர்சனம்: ’டாக்டர்’ வெற்றியை தக்க வைத்தாரா சிவகார்த்திகேயன்?