[X] Close

’ரெளடி பேபி’, ’புட்ட பொம்மா’ புகழ் ஜானி மாஸ்டருன் மீண்டும் இணைந்த தனுஷ்!

சினிமா

Dhanush-rehearse-for-a-song-in-D43

கார்த்திக் நரேன் இயக்கும் ‘தனுஷ் 43’ படத்தில் மீண்டும் குதூகலமூட்டும் பாடலுக்கான நடன பயிற்சியில் தனுஷ் ஜானி மாஸ்டருடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளன.


Advertisement

தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ‘கர்ணன்’, கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ’ஜகமே தந்திரம்’ விரைவில் வெளிவரவிருக்கின்றன.  இதனைத்தொடர்ந்து, தனுஷின் 43 ஆவது படத்தை கார்த்திக் நரேன் இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.  ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க  சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் தயாரிக்கிறது. மாளவிகா மோகனன் ஹீரோயினாக நடிக்கிறார். இப்படத்தின், மூன்று பாடல்களை முடித்துவிட்டதாக சமீபத்தில் ஜி.வி பிரகாஷ் கூறியிருந்தார். இந்நிலையில், மீண்டும் ஒரு குதூகலமூட்டும் பாடலுக்கான டான்ஸ் பயிற்சியில் தனுஷ் ஜானி மாஸ்டருடன் இருக்கும் புகைப்படத்தை ஜானி மாஸ்டர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து “அடுத்த ட்ரெண்டிங் பாடலுக்கான நடனப் பயிற்சியில்” என்று ’தனுஷ் 43’ படத்தின் அப்டேட் கொடுத்திருக்கிறார்.

image


Advertisement

’தனுஷ் 43’ மூலம் தனுஷ் – ஜானி மாஸ்டர் கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்துள்ளது. ஆந்திராவைச் சேர்ந்த ஜானி மாஸ்டர் தெலுங்கு மற்றும் பாலிவுட்டில் முன்னணி நடன இயக்குநராக இருக்கிறார்.  சமீபத்தில் வைரல் ஹிட் அடித்த ‘புட்ட பொம்மா’ பாடலின் நடன இயக்குநர் இவரே. தமிழில் முதன்முறையாக பிரபுதேவாவின் ’குலேபகாவலி’ படத்தில் சூப்பர் ஹிட் அடித்த ‘குலேபா குலேபா’ பாடலுக்கு நடனம் அமைத்துதான் தமிழில் அறிமுகமானார் ஜானி மாஸ்டர்.

image

அந்த ஆண்டின் சிறந்த நடன இயக்குநருக்கான ‘ஆனந்த விகடன்’ விருது ஜானி மாஸ்டருக்கு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத்தொடர்ந்து தனுஷின் ’மாரி 2’ படத்தில் உலகம் முழுக்க கொண்டாடிய ’ரெளடி பேபி’ பாடலுக்கு பிரபுதேவாவுடன் நடனம் அமைத்தவரும் இவரே. இப்படாலின் நடன இயக்குநர்கள் பெயரில் ஜானி மாஸ்டர்  பெயருக்கு அடுத்ததாகத்தான் பிரபுதேவாவின் பெயரே இடம்பெற்றுள்ளது. அடுத்ததாக, சிவகார்த்திகேயனின்  ’நம்மவிட்டுப் பிள்ளை’ படத்தில் ‘காந்த கண்ணழகி’, தனுஷின் ’பட்டாஸ்’ படத்தில் ஜிகிடி கில்லாடி பாடலுக்கு நடனம் அமைத்து கவனத்தை ஈர்த்தவர், தற்போது தனுஷுடன் ஹாட்ரிக் வெற்றி கொடுக்க ‘தனுஷ் 43’ படத்தில் இணைந்துள்ளார். 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close