[X] Close

இந்திய பெண் இரண்டு குழந்தைகளுடன் அயர்லாந்தில் கொடூர கொலை

உலகம்

Indian-woman--her-two-kids-found-brutally-murdered-at-their-home-in-Ireland

கர்நாடக மாநிலம் மைசூருவைச் சேர்ந்த 37 வயது பெண்ணும் அவரது இரண்டு குழந்தைகளும் கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பது அயர்லாந்து நாட்டின் தெற்கு டப்ளினில் அதிர்ச்சியை உருவாக்கியுள்ளது.


Advertisement

image

37 வயதான சீமா பானு சையத், அவரது 11 வயது மகள் அஸ்பிரா ரிசா மற்றும் 6 வயது மகன் பைசான் சையத் ஆகியோர் அயர்லாந்தின் பாலிண்டீர் பகுதியில் உள்ள லைவெல்லன் கோர்ட் என்னுமிடத்தில் உள்ள வீட்டில் கழுத்து நெரித்து கொலை செய்யப்பட்டனர். உள்ளூர் போலீஸின் தகவல்களின்படி, இம்மூவரின் சடலங்களும் கண்டுபிடிக்கப்படுவதற்கு ஐந்து நாட்களுக்கு முன்னரே இவர்கள் கொல்லப்பட்டதாக நம்பப்படுகிறது. சீமாவின் குடும்பத்தினரின் நடமாட்டம் வெளியில் இல்லாததால் அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர், இதன்பின்னர் காவல்துறையினர் இவர்களின் உடல்களை கைப்பற்றினர்.


Advertisement

ஒரு வருடத்திற்கு முன்னர்தான் சீமாவின் குடும்பம் அயர்லாந்திற்கு குடிபெயர்ந்ததாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. சீமாவின் கணவர் சமீர் சையத் வெளியூருக்கு சென்றிருந்ததாகவும், இந்த சம்பவம் குறித்து அவருக்கு அறிவிக்கப்பட்டதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன. வீட்டின் ஒரு அறையில் இரண்டு குழந்தைகளும் கழுத்து நெரிக்கப்பட்ட அடையாளங்களுடன் இறந்து கிடந்ததாகவும், சீமா பானு மற்றொரு இடத்தில் கழுத்து நெரித்துக் கொல்லப்பட்டதாகவும் ஐரிஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஐரிஷ்  காவல்துறை தொடர்ந்து சாட்சிகளை நேர்காணல் செய்து, வீட்டுக்கு வீடு வீடாக விசாரணை நடத்தி, தொடர்புடைய அனைத்து சி.சி.டி.வி.களையும் சேகரித்து ஆய்வு செய்துவருகின்றனர். சந்தேகத்திற்குரிய நபர் ஒருவரையும் கைதுசெய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மே மாதம் சீமா பானு தாக்குதலுக்கு ஆளானதாகவும், அதுகுறித்து ஐரிஷ் காவல்துறையில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர் இந்த வழக்கின் விசாரணைக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நீதிமன்றத்தில் அறிக்கை அளிக்க உள்ளதாக ஐரிஷ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மைசூரு மாவட்டத்தில் வயதான பெற்றோரின் எட்டு குழந்தைகளில் ஒருவரான சீமாவின் குடும்பத்தினர் அயர்லாந்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஐரிஷ் அதிகாரிகளிடம், இறந்த தனது மகள் மற்றும் பேரக்குழந்தைகளின் உடல்களை திருப்பி அனுப்புவதற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர். அயர்லாந்தில் உள்ள இந்திய தூதரகமும் இந்த சம்பவம் குறித்து அதிர்ச்சியை தெரிவித்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close