Published : 22,Jan 2017 03:42 PM

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் சேவல் சண்டை

Puducherry-protest

புதுச்சேரி நீதிமன்றம் எதிரே ஜல்லிக்கட்டிற்கு ஆதரவான போராட்டத்திற்கு இடையே சேவல் சண்டை நடத்தப்பட்டது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக புதுச்சேரியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருபவர்கள் இந்த சேவல் சண்டையை நடத்தினர். அதேநேரத்தில் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் நிரந்தரத் தீர்வு கோரி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களும்,மாணவர்களும் தங்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர். ஜல்லிக்கட்டுக்காக தமிழக அரசு அவசரச் சட்டம் இயற்றியுள்ளநிலையில், தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்கு நிரந்தர தீர்வு கோரி அலங்காநல்லூர், சென்னை மெரினா உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மாணவர்களின் தன்னெழுச்சிப் போராட்டம் தொடர்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்