வளசரவாக்கத்தில் சின்னத்திரை நடிகர்களை சூர்யா தேவி வீடு புகுந்து தாக்கியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நடக்கும் காமெடி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் நடித்து பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். இவர் நேற்று இரவு வளசரவாக்கம், வீரப்பா நகரில் சின்னத்திரை நடிகை சீபாவுடன் சேர்ந்து யூ டியூப் நிகழ்ச்சிக்காக படப்பிடிப்பு நடத்திக் கொண்டிருந்தனர்.
அப்போது அடியாட்களுடன் வீட்டிற்குள் நுழைந்த சூர்யா தேவி அங்கு இருந்தவர்களை சரமாரியாக தாக்கி விட்டு சென்றுவிட்டதாகவும், இதில் நாஞ்சில் விஜயன் மற்றும் உடன் இருந்தவர்களுக்கு காயம் ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக நாஞ்சில் விஜயன் சமூக வலைதளத்தில் வீடியோ காட்சி ஒன்றையும் பதிவிட்டு இருந்தார். அதில் பேசிய நாஞ்சில் விஜயன்,“வனிதா விஜயகுமார் திருமணத்தின்போது சூர்யா தேவிக்கும், வனிதாவுக்குமிடையே யூ டியூப்பில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் தான் வனிதா விஜயகுமாருக்கு துணையாக இருந்ததாக கூறி சூர்யா தேவி ஆட்களுடன் வந்து தங்களை தாக்கினார்.
ஆகவே சூர்யா தேவி மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என அந்த வீடியோவில் பதிவிட்டு இருந்தார். இதேபோல் சூர்யா தேவியும் யூ டியூபில் அவர் தரப்பில் பதிவு செய்துள்ளார். நாஞ்சில் விஜயன் மற்றும் சின்னத்திரை நடிகை தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Loading More post
8வது நாள், 20 டிக்கெட்டுகள், ரூ.4,420 வசூல்.. கங்கனாவின் ‘தாகத்’ படத்துக்கு சோதனை!
உச்சம் தொட்ட பெட்ரோல் விலை.. பாகிஸ்தான் அரசு எடுத்த புதிய முடிவு.. மகிழ்ச்சியில் மக்கள்!
‘கோடையை சமாளிக்க உதவும்‘ - 20 நாட்களில் சென்னை வந்தடைந்த 1 டி.எம்.சி கிருஷ்ணா நதி நீர்
’கருணாநிதி சிலை திறக்க மிகப் பொருத்தமானவர் வெங்கையா நாயுடு’ - முதல்வர் ஸ்டாலின்
பான் இந்திய டாப் ’10’ சினிமா நட்சத்திரங்கள்.. முதலிடத்தில் ‘மாஸ்டர்’ ஹீரோ!
உடலுறவு கொண்ட 10 நிமிடத்தில் திடீர் ஞாபக மறதி - அதிர்ந்துபோய் மருத்துவமனைக்கு ஓடிய நபர்!
தூங்குவதில் கூட ஹைஜினா? - செய்யவேண்டியவை? செய்யக்கூடாதவை?
வெள்ளை நிறம், மெல்லிய உடல்தான் அழகா? - உருவக் கேலி, கிண்டல்களை தடுக்க என்ன வழி?
எளியோரின் வலிமை கதைகள் 32: ``எதிர்காலத்தை பற்றிய பயம்தான்“- ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலாளி