Published : 01,Oct 2020 02:20 PM
வேலை கிடைத்த மகிழ்ச்சி.. சாலையில் துள்ளிக்குதித்து நடனமாடிய பெண் - வைரல் வீடியோ.!

வேலை கிடைத்த மகிழ்ச்சியில் அலுவலகத்திற்கு வெளியே மகிழ்ச்சி நடனமாடிய வீடியோ இன்ஸ்டாகிராமில் பல லட்சம் லைக்ஸ்களை அள்ளியுள்ளது
வேலை கிடைத்த பிறகு ஒரு பெண்ணின் மகிழ்ச்சியான எதிர்வினையை வெளிப்படுத்தும் வீடியோ இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்டுள்ளது. வேலை கிடைத்ததும் அலுவலக கட்டிடத்திற்கு வெளியே நடந்து சென்று இளம்பெண் மகிழ்ச்சியுடன் நடனமாடுவதை அந்த வீடியோ சிறப்பாக காட்டுகிறது.
அந்த இளம்பெண்ணின் முதலாளியால் பகிரப்பட்ட இந்த வீடியோ பார்ப்பவர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. இன்ஸ்டாகிராம் பயனர் ஏகே டகாரா_ஸ்பென்ஸ் இந்த வீடியோ கிளிப்பை பகிர்ந்து அதில் "எனவேதான் நான் இந்த இளம் பெண்ணை வேலைக்கு அமர்த்தினேன், இதுதான் அவளுடைய மகிழ்ச்சியான பதில்" என்று அவர் எழுதியுள்ளார்.
பகிரப்பட்டதிலிருந்து, இந்த வீடியோ 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளர்களை கவர்ந்ததுடன்,பல்லாயிரம் கருத்துகளையும் சேகரித்துள்ளது. இதுபற்றி பேசிய நடனமாடிய அந்த பெண் “நான் மகிழ்ச்சியில் அதை செய்தேன். யாரும் பார்க்கவில்லை என்று நினைத்தேன்! நான் கருதியது தவறு. நன்றி!" என்று கூறினார்.