[X] Close

மும்பையில் கனமழை : வெள்ளக்காடாய் காட்சியளிக்கும் கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனை

இந்தியா

Heavy-Overnight-Rains-Flood-Mumbai-Nair-Hospital

மும்பையில் பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அப்பகுதியில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கான மருத்துவமனையில் வெள்ள நீர் புகுந்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 24 மணிநேரத்திற்கும் மேலாக தொடர் கனமழை பெய்து வருகிறது. மும்பையில் இதுவரை பரவலாக 173 மி.மீ மழை பெய்துள்ளதாக மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக மும்பையில் உள்ள கொரோனா தொற்றுக்கு சிகிச்சையளிக்கும் மருத்துவமனையில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. அந்த வீடியோவில் படுக்கைகள், பிளாஸ்டிக் பொருள்கள், நாற்காலிகள் மழை நீரில் மிதக்கின்றன. இதனால் அங்கிருந்த கொரோனா நோயாளிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால் சமூக இடவெளி போன்ற அரசின் உத்தரவுகளை கடைபிடிக்க முடியாத சூழல் நிலவி வருகிறது.


Advertisement

மருத்துவமனையில் தங்கவைத்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஒருசில நோயாளிகளுக்காக மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர். அந்த மருத்துவமனை அருகே கடந்த 18 மணி நேரத்தில் 387 மி.மீ மழை பதிவாகியுள்ளது. மும்பை நகரத்திலே மழையின் அளவு அதிகமாக பதிவாகியுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் கூறுகையில், பலத்த மழையின் காரணமாக பாதிக்கப்படக்கூடிய இடங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 12 லட்சத்திற்கும் மேல் தாண்டியுள்ளது. இந்தியாவிலேயே கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் முதல் இடத்தில் மகாராஷ்டிரா மாநிலம் உள்ளது.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close