இன்று கூடிய அதிமுக உயர்மட்டக்குழுவில் தொண்டர்கள் ’’ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ்” , “நிரந்தர முதல்வர் எடப்பாடி” என மாறி மாறி முழக்கமிட்டனர்
கடந்த 2016 ஆம் ஆண்டு முதல்வராக இருந்த ஜெயலலிதா உடல்நலக்குறைவால் மறைந்ததையோட்டி அவரின் நம்பிக்கைக்குரிய ஓ.பி.எஸ் முதவரானார். அதன்பிறகு அவரிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டப் பின்னர், சசிகலா அதிமுகவின் முதல்வராக பொறுப்பேற்க முற்பட்டபோது, ஓ.பி.எஸ் கடந்த 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 7 ஆம் தேதி ’தர்மயுத்தம்’ நடத்தி சசிகலாவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார்.
இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி பெங்களூர் சிறைக்கு சென்றுவிடவே, அவரின் நம்பிக்கைக்குரிய எடப்பாடி பழனிச்சாமி முதல்வர் பொறுப்பை ஏற்றார். இந்நிலையில், பிரிந்திருந்த ஓ.பி.எஸ் அணியும், இ.பி.எஸ் அணியும் அதே ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணைந்தார்கள். ஓ.பி.எஸ் துணைமுதல்வராக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில், வரவிருக்கும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் ’யார் முதல்வர் வேட்பாளர்?’ என்ற சர்ச்சை சமீபத்தில் அதிமுகவில் எழுந்தது. இந்நிலையில், இன்று அதிமுகவின் தலைமை அலுவலகம் அமைந்துள்ள ராயப்பேட்டையில் உயர்மட்டக்குழு கூடியது.
இக்கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் கலந்துகொண்டார்கள். அப்போது அங்கு கூடிய தொண்டர்கள், ’’ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு ஓபிஎஸ்” , “நிரந்தர முதல்வர் எடப்பாடி” என மாறி மாறி முழக்கமிட்டனர்.
Loading More post
பிரஷித், மெக்காய் பந்துவீச்சில் சரிந்த ஆர்சிபி விக்கெட்! ராஜஸ்தானுக்கு 158 ரன்கள் இலக்கு!
மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை திறப்பு விழா: நேரில் ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின்
``ஒரு வாரத்தில் ஊழலை வெளிக்கொணர்வோம்; 2 அமைச்சர்கள் பதவி விலக நேரிடும்”- அண்ணாமலை
குரூப் 2 தேர்வுகளுக்கான விடைகளை வெளியிட்டது TNPSC! இந்த லிங்க்-ல் அறியலாம்!
ஈ சாலா கப் சாத்தியமாகுமா? டாஸ் வென்ற ராஜஸ்தான் பவுலிங் தேர்வு!
‘சேத்துமான்’ OTT திரை விமர்சனம்: உணவு அரசியலை அலசியிருக்கும் ’ஸ்ட்ராங் மேன்’!
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!