மும்பையில் ஊரடங்கு காலங்களைக் கழித்த நடிகை இலியானா, சில நாட்களுக்கு முன்பு தன் தாயுடன் சேர்ந்து அமெரிக்காவின் ஹூஸ்டன் நகருக்குச் சென்றுள்ளார். "என் குடும்பமே சிதறிக்கிடக்கிறது. என் தந்தை கோவாவில் இருக்கிறார். சகோதரியோ ஆஸ்திரேலியாவில். என் தாய் என்னுடன் அமெரிக்காவில் உள்ளார். கடந்த எட்டு மாதங்களாக என் குடும்பத்தை நான் பார்க்கவேயில்லை" என்று 'டைம்ஸ் ஆப் இந்தியா'வுக்கு அளித்த பேட்டியில் மனந்திறந்துள்ளார்.
மேலும், ஊரடங்கு அனுபவங்களைப் பகிர்ந்துள்ள இலியானா, " இந்த காலம் மிகவும் சிக்கலானதாக இருந்தது. எனக்கு இதுவொரு சுவாரசியமான ஆண்டாக இருந்தாலும்கூட தனிப்பட்ட முறையில் சற்று சிரமங்களும் இருந்தன" என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
சென்ற ஆண்டில் புகைப்படக்கலைஞர் ஆண்ட்ரு நீபோன் நட்பு முறிந்த நிலையில், மும்பையில் இந்த ஊரடங்கு நாட்களை தனிமையில் அவர் கழித்துள்ளார். "நேர்மையாகச் சொல்வதென்றால், நான் எப்படி இருக்க விரும்புகிறேன், ஒரு நபராக என்னை எப்படி மேம்படுத்துவது என்பதை முதன்முறையாகப் புரிந்துகொண்டேன். இந்த நான்கைந்து மாதங்களில் ஒன்றைப் புரிந்துகொண்டேன். உங்கள் மீது கருணை செலுத்த நீங்கள் மறந்துவிடுகிறீர்கள். உங்களிடம் கருணையு`டன் இருப்பது நீங்கள் சுயநலவாதி என்று அர்த்தமல்ல " என்று ஞானம் பெற்றவராகப் பேசியிருக்கிறார் இலியானா.
Loading More post
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
ஆஸ்கர் அகாடமியில் இருந்து நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு!
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix