[X] Close

ஜிஎஸ்டி அறிமுக விழாவில் பங்கேற்கமாட்டோம்: மம்தா பானர்ஜி

We-wont-participate-in-GSI-introduction-festival---Mamta

ஜூன் 30-ம் தேதி நடைபெறும் அறிமுக விழா நிகழ்ச்சியில் திரிணாமூல் காங்கிரஸ் பங்கேற்காது என்று அக்கட்சியின் தலைவரும், மேற்குவங்க முதல்வருமான மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

ஜூலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்படுவதையொட்டி, 30-ம் தேதி இரவு 11 மணிக்கு நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் நடக்க உள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் மம்தா பேசுகையில், “பண மதிப்பிழக்க நடவடிக்கையைப் போல், ஜிஎஸ்டி மோடி தலைமையிலான மத்திய அரசின் அடுத்த வரலாற்று பிழை. ஜிஎஸ்டி-யின் விதிமுறைகள் மற்றும் நடைமுறைகள் என்னவென்று கண்காணிக்க 6 மாத காலம் ஆகும். வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு சிறு மற்றும் குறு தொழில் முனைவோர்களுக்கு போதிய கால அவகாசம் அளிக்க வேண்டும்” என்றார். ஜிஎஸ்டி விழாவில் பங்கேற்க அனைத்து எம்.பி.க்களுக்கும் மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close