[X] Close

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி... கும்பகோணத்தில் தூங்கிக் கொண்டிருந்தபோது நடந்த விபரீதம்

மாவட்டம்

Graduate-boy-killed-by-electricity-----Tragedy-while-sleeping-in-Kumbakonam----

கும்பகோணம் அருகே உக்கரை என்ற கிராமத்தில் தூங்கிக் கொண்டிருந்த போது மின் விசிறி மூலம் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் பலியானார்.

image
கும்பகோணம் தத்துவாஞ்சேரி அருகே உள்ள உக்கரை கிராமத்தை சேர்ந்தவர் பிரசாத். பொறியியல் பட்டதாரியான இவர், இக்கிராமத்தில் உள்ள ஹோட்டல் அருகே காய்கறிக்கடை வைத்திருந்தார். வழக்கம்போல நேற்று இரவு கடையை மூடிய பிரசாத் கடையின் உள்ளேயே இரும்பு கட்டிலின் மேல் மின்விசிறியை வைத்துவிட்டு உறங்கிக் கொண்டிருந்தார்.

image


Advertisement

அப்போது மின்விசிறியின் மூலம் ஏற்பட்ட மின் கசிவால் கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த பிரசாத் மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத்தொடர்ந்து தகவல் அறிந்த வந்த திருப்பனந்தாள் காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பனந்தாள் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

image

பிரேத பரிசோதனைக்குப் பிறகு பிரசாத் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து திருப்பனந்தாள் காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement
[X] Close