உலகெங்கும் கொரோனா வேகமாக பரவி வருவதால் முகக்கவசம் அணிவது அவசியம் என வலியுறுத்தப்பட்டு வருகிறது. இந்திய உட்பட பல நாடுகளில் முகக்கவசம் அணியாமல் பொது வெளியில் வருபவர்களிடம் அபராதமும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் இதை கண்காணிக்க போலீசாரும் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். இந்நிலையில் உத்தர பிரதேச மாநிலம் பஹரச் மாவட்டத்தில் உள்ள பாண்டி காவல் நிலையத்தில் பணியாற்றும் காவல் நிலைய அதிகாரி சுபாஷ் சந்திர சிங் முகக்கவசம் அணியாத மக்களிடம் சலான் எழுதி அபராதம் வசூலித்துள்ளார்.
காவலர் சுபாஷ் சந்திர சிங் முகக்கவசம் அணியாமல் அந்த பணியை செய்துள்ளார் என போலீஸ் உயர் அதிகாரி விபின் மிஸ்ராவுக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனடிப்படையில் காவலர் சுபாஷிடம் முகக்கவசம் அணியாத காரணத்தினால் அவருக்கு 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
"முகமூடி அணிவது ஒரு நபர், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்கிறது. எங்கள் அதிகாரிகள் இந்த அடிப்படை விஷயங்களை கடைபிடிக்கவில்லை என்றால் நாங்கள் சமூகத்திற்காக என்ன செய்ய முடியும்.
போலீஸார் தவறு செய்தாலும் அது சட்டத்தின் எல்லைக்குள்தான் வரும். ” என்று அவர் தெரிவித்தார்.
Loading More post
சிறையிலிருந்து ஜாமீனில் வெளிவந்த ரவுடி சில மணி நேரத்திலேயே வெட்டிப்படுகொலை
டீ விலை ₹20; சர்வீஸ் சார்ஜ் ₹50; நல்லா இருக்கு இந்த பார்ட்னர்ஷிப்: IRCTC-ஐ சாடிய மக்கள்!
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: யார் கேப்டன்?
பக்ரைனில் இறந்த தொழிலாளி...நல்லடக்கம் செய்ய கைகோர்த்த ரஜினி ரசிகர் மன்றத்தினர்
மீண்டும் மிரட்டும் கொரோனா - பள்ளிகளில் முகக்கவசம் கட்டாயம்
எச்சரிக்கை: சைலண்ட் கில்லராகும் High BP.. இந்த அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!
7 உயிர்களை பலிவாங்கி, தமிழகத்தை உலுக்கிய மேலவளவு சம்பவமும் சாதிய வன்மத்தின் பின்னணியும்!
உஷார் மக்களே: ஜூலை 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் நிதிசார் மாற்றங்கள்
ஜூன் 30 : இந்த வாரம் வெளியாகும் திரைப்படங்களும் வெப் சீரிஸ்களும்! #OTTGuide