[X] Close

காணாமல் போன பணப்பை: 14 ஆண்டுகளுக்குப்பிறகு கண்டுபிடித்துக் கொடுத்த காவல்துறை

குற்றம்

Missing-wallet--Police-find-it-after-14-years

மும்பை ரயிலில் பணப்பையை இழந்தவரிடம் 14 ஆண்டுகளுக்குப் பிறகு  காவல்துறையால் மீட்டு வழங்கப்பட்டது நெகிழ்ச்சியையும் வேடிக்கையையும் உண்டாக்கியிருக்கிறது.  

2006 ஆம் ஆண்டு சத்திரபதி சிவாஜி மகாரஜ் டெர்மினல் பன்வேல் உள்ளூர் ரயிலில் பயணம் செய்தபோது ஹேமந்த் படல்கர் என்பவரின் பணப்பை காணாமல் போனது. இதனால், ரயில்வே காவல்நிலையத்தில் புகார் செய்தார்.  14 ஆண்டுகளுக்குப்பிறகு ஹேமந்த் படல்கருக்கு ரயில்வே போலீஸிடமிருந்து ஃபோன் வந்திருக்கிறது.

image


Advertisement

 “உங்கப்பணம் காணாமப்போயிருக்குன்னு புகார் கொடுத்திருக்கீங்க. அந்தப்பணம் கிடைச்சிருச்சு” என்று தொடர்புகொண்ட போலீஸ் சொல்ல, ஒரு நிமிடம் ஆடித்தான் போனார்.  “ஆமாங்க…. 14 வருடங்களுக்கு முன்னாடி புகார் கொடுத்தீங்க இல்லையா? அந்தப்பணம்தான்” என்று சொல்லி இன்ப அதிர்ச்சியில் உறைந்துபோயிருந்த ஹேமந்தை தட்டி எழுப்பியிருக்கிறது போலீஸின் குரல். ஏற்கனவே, பணத்தை பறிகொடுத்து 14 ஆண்டுகள் ஆனவருக்கு பணம் கிடைத்துவிட்டது என்ற தகவல் கிடைத்தும், கொரோனா ஊரடங்கால் அந்தப்பணத்தை உடனே போய் வாங்கமுடியவில்லை. பிறகு, ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு நவி மும்பைக்கு சென்று அப்பணத்தை பெற்றுள்ளார்.

14 ஆண்டுகளுக்கு பறிகொடுத்த பணம் எப்படி கிடைத்தது?

 


Advertisement

image

திருடன்களை பிடித்து விசாரிக்கும்போது ஒருவனிடம் அந்த பை இருந்திருக்கிறது. ஆனால், 14 ஆண்டுகளுக்கு முன் பறிகொடுத்தப்பணம் தற்போது டிமானிடைசேஷனால் செல்லா நோட்டாக இருந்தது. அதனால், புதிய நோட்டுகளை ரெக்கவரி செய்து, பணத்தை பறிகொடுத்தவருக்கு வழங்கியிருக்கிறது காவல்துறை. அவர், பறிகொடுத்த பணம் 900 ரூபாய். இப்போது, அந்தத்தொகை குறைவானதாக தோன்றலாம். ஆனால், 14 வருடங்களுக்கு முன் அதன் மதிப்பு அதிகம். அதுவும், கஷ்டப்பட்டு உழைக்கிறவர்களின் ஒவ்வொரு ரூபாயும் மதிப்புவாய்ந்ததுதான்.

 


Advertisement

Advertisement
[X] Close