Published : 26,Jun 2017 05:01 PM

பேட்டிங் வேண்டாம்... டாஸின் போது முடிவை மாற்றிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன்

WI-captain-Taylor-wants-to-bat--then-changes-her-mind--Match-ref-says-WI-to-bat

பேட்டிங் வேண்டாம்... டாஸின் போது முடிவை மாற்றிய வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் 

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கெதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. 

இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஸ்டெஃபானி டெய்லர், முதலில் பேட்டிங் தேர்வு செய்வதாகக் கூறினார். சில நொடிகளில் மனதை மாற்றிக் கொண்ட டெய்லர், வெஸ்ட் இண்டீஸ் அணி பீல்டிங் தேர்வு செய்வதாகக் கூறினார். ஆனால், முதலில் கூறியபடி வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் செய்யும் என்று நடுவர் அறிவித்தார். இதையடுத்து முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 47.5 ஓவர்களில் 204 ரன்களுக்கு ஆல்அவுட் ஆனது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஹேலே மேத்யூஸ் 46 ரன்களும், கேப்டன் ஸ்டெஃபானி டெய்லர் 45 ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் எல்ஸி பெர்ரி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி நிகோல் போல்டனின் சதத்தின் உதவியுடன் 38.1 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி இலக்கை எட்டியது.   

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்