Published : 26,Jun 2017 11:26 AM
தமிழகத்தில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 24மணிநேரத்தில் ஒருசில இடங்களில் இடியுடன கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்மேற்கு பருவமழை வடமாநிலங்கள் மற்றும் தென்மாநிலங்களில் கேரளாவில் தீவிரமடைந்துள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை ஓரிரு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்தநிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனறும் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 98டிகிரி பாரன்ஹீட்டாக இருக்ககூடும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக வால்பாறையில் 7 செமீ மழையும் சின்னக்கல்லாரில் 6 செமீ மழையும் பதிவாகியுள்ளது.