கொடைக்கானலில் நேற்றிரவு வீசிய பலத்த காற்றால் பல்வேறு இடங்களில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக சாரல் மழையுடன் கூடிய பலத்த காற்று வீசி வருகிறது. உட்சபட்சமாக நேற்று பகல் பொழுதில் 11 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசியதாக கூறப்படுகிறது. மாலை வேளைக்கு பின்னர் கூடுதல் வேகமெடுத்த காற்றால், கொடைக்கானல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் பத்திற்கும் மேற்பட்ட இடங்களில் இருந்த மரங்கள் விழுந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னர் நெடுஞ்சாலைத்துறை, தீ அணைப்புத்துறை மற்றும் வனத்துறையின் துரித நடவடிக்கையால் போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. நகரில் ஏரிக்கு செல்லும் பெண்டர் லாக் சாலை பகுதியில் நகராட்சியால் அமைக்கப்பட்டுள்ள, தகர கடைகள் மீது விழுந்த ராட்சத மரத்தால் ஆறு கடைகள் சேதம் அடைந்துள்ளன. நகரில் ஆங்காங்கே விழுந்துள்ள மரங்களால், மின் கம்பங்கள் சாய்ந்து மின் கம்பி வடங்கள் அறுந்து விழுந்ததால் பல பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.
மரங்களை அகற்றும் பணிகளிலும், மின் இணைப்பை சீரமைக்கும் பணிகளிலும், நகராட்சி மற்றும் மின்வாரிய பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதைத்தவிர கொடைக்கானல் மேல்மலை மன்னவனூர் செல்லும் நெடுஞ்சாலையில், கூக்கால் பிரிவு அருகே ராட்சத குங்குலிய மரம் வேரோடு சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்து போக்குவரத்து பாதிப்படைந்தது,
இதனால் மேல்மலை மன்னவனூர், கும்பூர், கீழானவயல், கவுஞ்சி, பூண்டி, கிளாவரை, போளூர் கிராம மக்கள், காய்கறிகளை வாகனத்தில் கொண்டு வரமுடியாமல், இன்று நண்பகல் வரை சிரமப்பட்ட நிலையில், நெடுஞ்சாலைத்துறை மற்றும் வனத்துறையினர் இணைந்து மரத்தை அகற்றி போக்குவரத்தை சீர் செய்தனர்.
Loading More post
இழந்து விடக்கூடாதது ஒன்றே ஒன்றுதான்! - #MorningMotivation #Inspiration
குருமூர்த்தி போல எல்லா பிராமணர்களும் கோழைகள் அல்ல - சுப்ரமணிய சுவாமி சர்ச்சை ட்வீட்
ஊழியர் சம்பளத்தை தவறுதலாக ரூ.1.4 கோடி செலுத்திய நிறுவனம்... தலைமறைவான ஊழியர்!
உயர்த்தப்பட்ட ஜி.எஸ்.டி! விலை உயரப்போகும் பொருட்கள் எவை எவை? முழு விபரம்!
மகாராஷ்டிராவில் நம்பிக்கை வாக்கெடுப்பு - யாருக்கு சாதகம் - யாருக்கு பாதகம்?
பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
'இந்த கேரக்டர்ல கிரேஸி மோகன்தான் நடிக்க இருந்தாரு' - untold facts of பஞ்சதந்திரம்!
`எதிரொலியும் இல்ல, ஒலியும் ஒளியும் இல்ல’ - 20 வருடங்களான சிரிப்பு மெடிசின் `பஞ்சதந்திரம்!’
அடேங்கப்பா.. ஒரே நேரத்தில் பல நிறுவனங்களில் பல கோடிகளில் வேலை...திறமையால் நிமிர்ந்த மாணவர்
அதள பாதாளத்தில் நெட்ஃப்ளிக்ஸ்... மீண்டும் ஓடிடியின் ஒன்லி ராஜாவாகத் திரும்புமா? #Netflix