Published : 23,Jul 2020 01:10 PM

போபாலில் நாளை முதல் 10 நாட்கள் ஊரடங்கு

lockdown-in-Bhopal-from-July-24--MP-govt-announced

நாடு முழுவதும் மாநில அரசுகள் கொரோனா பாதிப்பைப் பொறுத்து, அந்தந்த பகுதிகளில் ஊரடங்கு உள்ளிட்ட சில கட்டுப்பாடுகளை அமல்படுத்தி வருகின்றன. ஆந்திர மாநிலம், திருப்பதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்தியப் பிரதேச  தலைநகர் போபாலில் நாளை முதல் பத்து நாட்கள் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மத்தியப் பிரதேச மாநில உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, போபால் மாவட்டத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வரையில் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாகத் தெரிவித்தார். முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்திற்குப் பிறகு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.   

image

ஊரடங்கு அமலில் உள்ள நாட்களில் போபால் நகருக்கு உள்ளே நுழைவதும் வெளியே செல்வதும் முற்றிலுமாக தடை செய்யப்படுகிறது. காய்கறி, பால் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள், அரசு ரேஷன் கடைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்கும். கடந்த 9 நாட்களில் போபாலில் ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகின்றனர். மேலும், 24 மணி நேரத்தில் 157 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.   

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்