Published : 20,Jul 2020 08:56 PM

அதிகரிக்கும் பாதிப்பு: திருவனந்தபுரத்தில் ஜூலை 28 வரை ஊரடங்கு நீட்டிப்பு

The-curfew-has-been-extended-till-July-28-in-Thiruvananthapuram--Kerala-

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் ஜூலை 28 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலத்தின் தலைநகரான திருவனந்தபுரத்தில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால் வருகிற ஜூலை 28 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுளளது. முன்னதாக ஜூலை 6 முதல் ஜூலை 20 வரை இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

புதிய உத்தரவின்படி கட்டுமான தொழிலாளர்கள் தாங்கள் பணிபுரியும் இடத்திலேயே தங்கிக் கொள்ள வேண்டும். அதேபோல ஆடிட்டிங் ஜெனரல் அலுவலகம் 30 சதவீத ஊழியர்களுடன் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கேரள தொழில்துறை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகம் மற்றும் மருத்துவ உபகரணங்களின் உற்பத்தி பிரிவுகளில் கழிவு மேலாண்மை அலகுகளை இயக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

image

கடந்த நான்கு நாட்களில் மட்டும் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றும் 18 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்கள் தவிர அறுவை சிகிச்சை, எலும்பியல் மற்றும் சிறப்பு வார்டுகளில் இருக்கும் மூன்று நோயாளிகளும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் பணியாற்றும் 50 மருத்துவர்கள் மற்றும் 40 செவிலியர்கள் உட்பட 150 ஊழியர்களை தனிமைப்படுத்தி வைத்துள்ளனர். 

image

கேரளாவில் ஞாயிற்றுக்கிழமை மட்டும் 821 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் உள்ளுர் பரவுதல் மூலமாக 642 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். திருவனந்தபுரத்தில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட 2144 பேரில் 1,858 பேர் மட்டுமே தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்