திருப்பூரில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாலையைக் கடப்பதுபோல சென்று திடீரென்று லாரி முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தின் வழியே செல்லும் பழனி - ஒட்டன்சத்திரம் புறவழிச்சாலையில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சாலையைக் கடக்க முயன்றதுபோல் சென்றார். ஆனால் திடீரென்று அந்த நபர் எதிரே வந்த லாரியின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளை தற்போது காவல்துறையினர் வெளியிட்டிருக்கின்றனர். அடையாளம் தெரியாத நபர் என்பதால் தாராபுரம் தெற்கு கிராம நிர்வாக அலுவலர் ஸ்ரீதர் அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்குச் சென்ற தாராபுரம் காவல்துறையினர் உடலைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு எடுத்துச்சென்றனர். மேலும், இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்கொலை என்பது எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வல்ல. எனவே தற்கொலை எண்ணம் தோன்றினால் கீழ்க்கண்ட நிறுவனத்திற்கு தொடர்பு கொள்ளவும்..
சினேஹா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை,
ஆர்.ஏ. புரம், சென்னை - 600 028.
தொலைபேசி எண் - +91 44 2464 0050, +91 44 2464 0060)
Loading More post
‘பிரதமர் ரணில் கோரிக்கையை புலம்பெயர் தமிழ் உறவுகள் ஏற்கக் கூடாது’ - கஜேந்திரகுமார் எம்பி
பூந்தமல்லி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடியுடன் கூடிய கனமழை
’சூர்யா 41’ கைவிடப்படுகிறதா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தது சூர்யாவின் அப்டேட்!
சட்டவிரோத விசா வழக்கு - மே 30ம் தேதி வரை கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய இடைக்கால தடை
மீண்டும் மூடுவிழா காண்கிறது சாண்ட்ரோ
ரஷீத் கானின் அந்த 4 ஓவர்களும்; ராஜஸ்தான் ராயல்ஸ் கோட்டைவிட்ட இடங்களும்!
ஐபிஎல் பிளே ஆஃப் போட்டி: மழை பெய்தால் யாருக்கு சாதகம்? - விதிகள் என்ன?
வலி நிறைந்த வாழ்வின் தடங்கள்... எப்போது ஆறும் கேரள விஸ்மயா கடந்து சென்ற முட்பாதையின் ரணம்?
தினேஷ் கார்த்திக் இம்முறையும் பெஞ்ச் தானா? அணி தேர்வில் இப்படியொரு இடியாப்ப சிக்கலா!