Published : 12,May 2020 04:10 AM
முதலமைச்சர் பழனிசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய பிரதமர்

(கோப்பு புகைப்படம்)
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பிரதமர் நரேந்திர மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையொட்டி பிரதமர் மோடி, முதலமைச்சருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், “தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். நல்ல ஆரோக்கியத்துடன் மக்கள் சேவையில் நீண்ட நாட்கள் இருக்க இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
Greetings to Tamil Nadu CM Thiru Edappadi K. Palaniswami Ji on his birthday. May Almighty bless him with good health and a long life in service of people. @CMOTamilNadu
— Narendra Modi (@narendramodi) May 12, 2020
இதேபோல், மத்திய பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், தமிழக முதல்வருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.