Published : 16,Jun 2017 10:29 AM

வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் கட்டாயம்

Aadhar-must-be-mandatory-for-opening-new-bank-account

வங்கிக் கணக்கு தொடங்க ஆதார் எண்ணைக் கட்டாயமாக்கி மத்திய அரசு அறிவித்துள்ளது.
 
அதேபோல, சட்டவிரோத பணபரிமாற்றத்தைத் தடுப்பதற்காக ரூ.50,000த்துக்கும் மேலான பணபரிவர்த்தனைகளுக்கு ஆதார் எண் அவசியம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்கள் வரும் டிசம்பர் 31ம் தேதிக்குள் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆதார் எண் இணைக்கப்படாத வங்கிக் கணக்குகள் டிசம்பர் 31ம் தேதிக்குப் பின்னர் செல்லாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய சேவைகளுக்கு ஆதாரைக் கட்டாயமாக்கக் கூடாது என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியிருந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்