Published : 16,Mar 2020 02:56 PM
“போனா போகட்டும் பிச்ச உசுரு தானே”: கலங்க வைக்கும் மாஸ்டர் பாடல்..!

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்து முடிந்துள்ளது. ஒரு பக்கம் இசை வெளியீட்டு விழாவில் விஜய், விஜய் சேதுபதி ஆகியோர் பேசியவது குறித்து விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். மற்றொரு புறம், மாஸ்டர் படத்தின் பாடல்கள் குறித்து பலரும் தங்களது கருத்துகளையும், விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார்கள்.
'20 வருடங்களுக்கு முன்பிருந்த வாழ்க்கை வேண்டும்' - இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் \
மாஸ்டர் படத்தில் மொத்தம் 7 பாடல்கள் மற்றும் பீட் ஆப் மாஸ்டர் என்ற இன்ஸ்ட்ரூமெண்டல் இசையும் இடம்பெற்றுள்ளது. இந்த ஆல்பத்தின் யுவன் சங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன் தலா ஒரு பாடலை பாடியுள்ளார்கள். அதுபோக அனிருத்தும் ஒரு பாடலை பாடியுள்ளார். ஆனால், மாஸ்டர் ஆல்பத்தின் முக்கியமான பேச்சாக ‘போனா போகட்டும்’ என்ற பாடல்தான் அதிக அளவில் உள்ளது. விஷ்ணு எடவன் என்பவரின் வரிகளில் சிபி வினீத் என்ற சிறுவன் இந்தப் பாடலை பாடியுள்ளார். இந்த ஆல்பத்தில் உள்ள ஒரே சோகப் பாடல் இதுதான். உண்மையில் சிறுவன் வினீத்தின் குரல் எல்லோரையும் சோகத்தில் ஆழ்த்திவிடும்படி உள்ளது. சிலரை கலங்க வைக்கவும் நிச்சயம் வாய்ப்புள்ளது.
விஜய் படத்தின் வாய்ப்பு எப்படி கிடைத்தது? - லோகேஷ் கனகராஜ் விளக்கம்
‘தருதல கதறுனா கேட்குமா கேட்குமா’ என்ற வரிகளுடன் தான் இந்தப் பாடல் தொடங்குகிறது. அதனால், படத்தின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட டிராக் லிஸ்டில் ‘தருதல கதறுனா கேட்குமா கேட்குமா’ என்றுதான் பாடலுக்கு பெயரிட்டிருந்தார்கள். ஆனால், பின்னர் ‘போனா போகட்டும்’ என்று மாற்றிவிட்டார்கள். சிறையில் இருந்து வாடும் ஒரு சிறுவன் பாடுவது போல் இப்பாடல் அமைந்துள்ளது. இந்தப் பாடல் வெறும் ஒரு நிமிடம் 37 நொடிகள் மட்டுமே இருந்தாலும் உருக்கமாக உள்ளது.
பாடலை பாடியுள்ள சிறுவன் சிபி வினீத் யார் என தற்போது பலரும் இணையத்தில் தேடி வருகிறார்கள்.
பாடலை கேட்க இங்கே கிளிக் செய்யவும்.. போனா போகட்டும்
பாடல் வரிகள்:
தருதல கதறுனா கேட்குமா ..கேட்குமா
தருதல கதறுனா கேட்குமா ..கேட்குமா
இருட்டு அறையில.. அட உண்ம மறவில
நான் சிறக விரிக்கத்தான்.. கொஞ்சம் ஆச வளத்துட்டேன்..
வெளிச்சம் தெரிஞ்சது.. நீல வானம் விரிஞ்சுது..
ஆனா பறக்க முடியல.. அடி நகர முடியல...
பச்ச மண்ணு புள்ள ரெண்டு.. மூச்சு நின்னு போயாச்சு
இங்க தங்குறதும்.. தூங்குறதும் ரெண்டு ஒண்ணு ஆயாச்சு
கண்ணு ரெண்டும் களங்குதா நீயே தொடச்சுக்கோ..
இங்க.. அப்ப ஆத்தா யாரும் இல்லை தனியா தவிச்சுக்கோ..
போனா போகட்டும் பிச்ச உசுரு தானே..
திருந்த முடியாத தருதலதான் நாமே..
போனா போகட்டும் பிச்ச உசுரு தானே..
திருந்த ஆசைவுள்ள தருதலதான் நாமே..
தருதல கதறுனா கேட்குமா கேட்குமா..
தருதல கதறுனா கேட்குமா கேட்குமா..