[X] Close

‘ஜல்சா கேட் பகுதிக்கு வர வேண்டாம்’ - கொரோனாவால் ரசிகர்களுக்கு அமிதாப் அன்பு வேண்டுகோள்

இந்தியா,சினிமா

Amitabh-Bachchan-cancels-Sunday-meet-at-Jalsa-amid-coronavirus-crisis

பல ஆண்டுகளாக அமிதாப் பச்சன் கடைப்பிடித்து வந்த நிகழ்ச்சி கொரோனா அச்சம் காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.


Advertisement

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்த அச்சம் நிலவி வருகிறது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாகவும், கேரளாவில் பறவைக் காய்ச்சல் பீதியாலும் கோழி இறைச்சியின் விற்பனை சரிவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 107 ஆக அதிகரித்துள்ளது. தமிழகத்தில் அனைத்து வகையான பள்ளிகளிலும் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

image


Advertisement

இந்நிலையில் இன்று நடைபெறுவதாக இருந்த ரசிகர்களுடனான சந்திப்பை அமிதாப் பச்சன் ரத்து செய்துள்ளார். இந்த நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டது குறித்து அமிதாப் பச்சன் அவரது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அவர் பகிர்ந்து கொண்டுள்ள ஒரு புகைப்படத்தில் தலையில் ஏதோ கட்டுப் போட்டுக் கொண்டிருக்கிறார் அமிதாப். ஆங்கில பதிவு புரியாத ரசிகர்களுக்கு அவர் இந்தியில் ஒரு கவிதை வடிவில் பேசிய கோரோனா விழிப்புணர்வு வீடியோவும் வெளியாகி இருக்கிறது.


Advertisement

இதனைத் தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், யாரும் தயவு செய்து ஜல்சா கேட் பகுதிக்கு வர வேண்டாம். இன்று நடப்பதாக இருந்த ரசிகர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. அச்சந்திப்புக்கு நான் வரப் போவதில்லை. பாதுகாப்பாக இருங்கள். முன்னெச்சரிக்கை சார்ந்த நடவடிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள் என்று கூறியுள்ளார். அதே போல் இந்த வீடியோவில் ‘நை கொரோனா.. கொரோனா’ என்று ரைமிங் ஆக கவிதையில் பேசி அசத்தி இருக்கிறார். ‘நை கொரோனா’ என்றால் செய்ய வேண்டாம் என்பது பொருள். அதையே அவர் கொரோனா , கொரோனா எனக் கூறியுள்ளார். மேலும் வெளியில் வர வேண்டாம் என்கிறார்கள். ஆகவே வராதீர்கள் என்றும் கூறியுள்ளார்.

image

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் மும்பையில் உள்ள தனது இல்லத்திற்கு வெளியே கூடியிருக்கும் தனது ரசிகர்களை அமிதாப் சந்தித்து வாழ்த்துவது வழக்கம். இதனை நீண்ட காலமாக அமிதாப் செய்து கொண்டுள்ளார். பல முறை தனது வீட்டின் முன் ரசிகர்களுடன் எடுத்து கொண்ட புகைப்படங்களை அமிதாப் சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். பல வருடங்களாக நடந்து வந்த அந்த வழக்கமான நிகழ்வு கொரோனாவினால் ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 


Advertisement

Advertisement
[X] Close